பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194. அருணகிரிநாதர் வாங்கிய பெருமாளே என்ற இடத்தும், 1115 எண்ணுள்ள திருப்புகழில் பிரமா ஒட...வரை சாய ஆழி வற்றிட...சூர் மாள விக்ரம வேல் ஏவு’ என்ற இடத்தும் வேல் வாங்கு வகுப்பின் கருத்தைக் காணலாகும். 15. புயவகுப்பு இது அருமையாய் அமைந்து பொருள் செறிந்துள்ள வகுப்பு. முதல் பன்னிரண்டு அடிகளில் திருமுருகாற்றுப் படையை அப்படியே தழுவிப் பின்னர் முருகன் திருப்புயத் தின் சிறப்புக்கள் வேறு பலவற்றை எடுத்துக் கூறுகின் :றது. எங்கள் பதிப்பு திருப்புகழ் மூன்ரும் பாகத்தில் அடிக் குறிப்புக்களைப் பார்க்க. அடி 40. வெருவுவ வெருவ பூத பிசாசு...போ.த... கண்டை வாசிக்கை கொண்டன...புயங்களே; முருகன் திருக் கரம் ஒன்றில் 'மணி' உண்டு. (ஒருகை பாடின்படு மணி இரட்ட-திருமுருகாற்றுப்படை)-முருகன் திருக் கரத்தில் ஒசை தரும் மணி என்ன காரணம் பற்றி வைத்துள்ளார் என்பதை இந்த அடி விளக்குகின்றது. பூத பிசாசுகள் அஞ் சிப் போகும்படி-மணியை முழக்கி ஒலிக்கச் செய்கின்ருர்என ஏற்படுகின்றது. அது பற்றி பிசாசு சேஷ்டை, பூத சேஷ்டை உள்ள இடங்களில் இத்திருவகுப்பு ஒதுதல் சிறந்த தந்த்ர முறையாகும். அடி 17. ரா. க ங் க ளி ன் பெயர்களைக் கூறி முருகர் 'இசைப் பிரியர், என்பதைக் காட்டுகின்றது. ‘ராகவிநோத’ என்பது கந்தரந்தாதி 98. முருகர் வீணை வாசிப்பர் என்ப தற்கு எம் இறை நல்வீணை வாசிக்குமே (அப்பர்), விட முண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி :(சம்பந்தர்) என வரு வனவற்றை ஒப்பிடுக. அடி 22. இயல் மு.நி. இயற்றமிழ் முதி-நக்கீரர் (திரு முருகாற்றுப் படை பாடினராதலின்), நக்கீரர் ஆற்றுப்படை சொல்லிப் பரவ, முருகவேள் மலைக்குகையினின்றும் மஹா கோர குதிரை முகத்துப் பெண் பூதத்தினின்றும் அவரைக்