பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 அருணகிரிநாதர் கிடைத்தது. அத்தகைய பெரியாரின் கவித்திறத்திற் சில எடுத்து விளக்குவாம். (1) செய்யுள் நடை அருணகிரியாரின் செய்யுள் நடை அவருக்கென்றே அமைந்தது. அந்நடைக்கு இணை அவருக்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை. அவர் திருவாய் மலர்ந்த பதிருை யிரம் திருப்புகழ்ப் பாக்களில் இப்போது கிடைத்து அச்சேறி யுள்ளன. 1307. இந்த 1307 பாடல்களில் அமைந்துள்ள சந்தவகை 1008. இந்த 1008 சந்தங்கள் தம்முள் I_IճՆ) பாகுபாடுகள் உள்ளன. சில சந்தங்கள் வல்லோசையே. மிக்கு நிற்கும். உதாரணமாக ;- o “ தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தததத தததத தனதான) என்னும் சந்தத்தை எடுத்துக் கொள்வோம். இந்த சந்தத் தில் அ மைந்த திருப்புகழ்ப் பாடலின் ஒரடியை ஈண்டு குறிக் கின்ருேம். சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் கினியோனே.” (473) இதற்கு- சுத்த சொரூபியும், பத்தி நிறைந்தவளும் விசித்ர ஸ்தனங்கள் உடையவளுமாகிய தேவலோகக் கிளி யான தேவசேனைக்கு இனியோனே என்பது பொருள். இந்த வாக்கு எவ்வளவு கடினமான சந்தத்தில் எவ்வளவு எளிதாக அமைந்துள்ளது பாருங்கள். அதற்குள் 'சொர்க் கம்’ என்னும் சொல் ஸ்தனம்', 'விண்ணுலகம்’ என்னும் இரு பொருள்களில் இயைந்துள்ளதையும் நோக்குங்கள். வடமொழியும் தென்மொழியும் எவ்வளவு இனிமையாகப் பவளமும் முத்தும்போல இணைக்கப்பட்டு அழகுபெற விளங்குகின்றன என்பதையுங் கவனியுங்கள். இனி, மெல் லோசை மிகுந்த ஒரு அடியைக் காட்டுவோம். 'ஐ ந் தி க் க்ரியங்கள் வென்(ெmன் m மன்ப ೫ಕ್ಚಿ: :ಲ್ಲ? (1237)’-இது. 'தந்தந் தனந்த, தந்தந் தனந்த தந்தந தன.நத தன தாை