பக்கம்:அவள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜனனி 125

தேவி, ஜன்மத்தில் அகப்பட்டவன், பொறியுள் அகப்பட்டுக்கொண்ட எலி!"

'குழந்தை, அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் எலியாய்ப் பொறியுள் புகுந்தாலும், நான் எப்பொழுது நினைத்தேனோ அப்பொழுது வெளிப்படப் பொறிக்கதவு எனக்கு எப்போதும் திறந்திருக்கும்.'

"தேவி, நீ இதை அறியவேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு, கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயே தான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக்கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூடப் பயப்படுகிறது" -

'சத்தியம் எப்போதும் ஜயிக்கும். ஆகையால் எனக்கு விரைவில் இடம் விடு; தவிர, உனக்கு இப்பொழுது விடுதலை அளிக்கிறேனே, அதனால் உனக்குச் சந்தோஷம் இல்லையா?”

'ஆனால் இந்த ஜன்மத்தின் மூலம் எனக்கும் விதித்திருக்கும் வினை தீர்ந்தாக வேண்டுமே!’

"அதைத்தான் உனக்குப் பதிலாக நான் அநுபவிக்கப் போகிறேனே! எந்தப் பரமாணுவின் வழி நான் இந்தக் காயத்தினுள் வந்தேனோ, அதன் உருவில் நீ இத்தாயின் வெளி மூச்சில் வெளிப்படுவாயாக!-ஆசீர்வாதம்.'

"தேவி, நான் மகா பாக்கியசாலி! எல்லோருக்கும்பிறப்பு இறப்பு இரண்டையும் அநுபவித்த பிறகுதான் முக்தி என்றால், எனக்குப் பிறப்பின் முன்னரே விடுதலை கிட்டிவிட்டது! நான் செலவு பெற்றுக்கொள்கிறேன்!”

ந்தப் பரமாணு வெளிப்படுகையில் அவள் வீரிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/169&oldid=1497040" இலிருந்து மீள்விக்கப்பட்டது