பக்கம்:அலைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 O. லா. ச. ராமாமிருதம்



குரல் என்மேல் வீறினதும் எனக்கு மண்டை "வீர்ர்ர்" ராகி கண்ணை இருட்டறது. அவனை அப்படியே வாரிக்கறேன். என் விரலின் தடிப்பை அவன் விலாவில் பார்க்கறப்போஅவனே சேப்பு- எனக்குத் துக்கம் பீறிண்டு வரது. அவன் என் கழுத்தை இறுகக் கட்டிக்கறான். “ஏம்மா அழறே? ஏம்மா அழறே?" நான் ஊளையிடறேன்; ஒத்தரையொத்தர் கட்டிண்டு ஆத்திரம் கரைய அழுது களிச்சு அடங்கறப்போ ப்ளாட்பாரத்தில் ரயில் குமுறி, இருமி, கக்கித் துப்பி. பெரு மூச்சு விட்டுண்டு நிக்கற ஞாபகம் வரது. மெதுவ்வா, என் கழுத்தைக் கட்டிண்டபடியே கன்னத்து சதையை வாய் நிறைய அள்ளிக் கவ்வி வெடுக்குனு கடிக்கறான். "விடு சனியனே’’ன்னு உதறி எறியறேன். கன்னத்துலே இன்னும் கண்ணீர் சாயல்லே கண்ணோரத்தில் போக்கடாச் சிரிப்பு துளும்பறது, பனியிலே குளிச்ச ரோஜா மாதிரி.

ஆனால் அத்தோட அது அவ்வளவுதான். அடுத்த நிமிஷம் ஆம்புலேறித் தோம்பிலே விழுந்து அதைக் கிளறி இதை நோண்டி, பூஜைப் பெட்டியிலேருந்து ஸாலிக் கிராமத்தையெடுத்து "அட,பாதாம்பருப்புப் புட்டு மாதிரி வயவயன்னுருக்கே நான் விளையாட எடுத்துக்கட்டுமாம்மா"ன்னு கேக்கறது. என்னத்தைப்பண்ண?

இதுகளின் இம்சை நம்மாத்துலே, நம்மாலேயே சமாளிக்க முடியல்லியே, பிறத்தியார் வீட்டிலே பிறத்தியார் ஸகிச்சுக்கணும்னு எந்த ‘'ரூல் "லே எழுதியிருக்கு? ஆமாம் என் குழந்தைகள் விஷயத்துலே என்னைப் பெத்தவா கூட பிறத்தியார்தான்.

இன்னிக்கு அப்பாவுக்கும் எனக்கும் சண்டை.

சண்டைக்குக் காரணம் என்ன? குழந்தைகள்தான்; என் குழந்தைகளும் எனக்கு வாயும் இருக்கற வரைக்கும் சண்டைக்கு என்ன குறைச்சல்? தப்பு என் குழந்தைகள் மேல் தான் இருக்குன்னு எனக்கு நன்னாத் தெரியறது. ஆனால் நியாயம்னு தீர்க்கவரப்போ, சமயத்திலே கண்ணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/270&oldid=1287228" இலிருந்து மீள்விக்கப்பட்டது