பக்கம்:அலைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 223


சக்கரம் ஒடறதே! எல்லாம் தும்பை விட்டுட்டு வாலைப்-'’

வாசற் படியில் சட்டென நிழல் தட்டிற்று. அம்மா வாயில் வார்த்தை உறைந்து போயிற்று.

அப்பா வாசற்படியை அடைத்துக் கொண்டு நின்றார் மூழ்கி எழுந்த மாதிரி அப்பாவுக்குத் தலை, உடம்பு பூரா சொட்டச் சொட்ட நனைந்திருந்தது,

அப்பா அங்கச்சியைக் குழந்தைபோல் ஏந்திக் கொண்டிருந்தார். ஏதோ சொல்ல முடியாமல் அப்பாவுக்கு வாய் திறந்து மூடித் திறந்து, நாக்கு விடுபட்டதும் அதனின்று கோரமானதோர் சத்தம் கிளம்பிற்று.

அங்கச்சியின் பின்னல் டம்பங் கூத்தாடி சாட்டைபோல் நுனியில் குஞ்சலத்துடன் பூமியை இடித்தது. அப்பாவின் ஏந்திய அணைப்புக் கடங்காது, விறைத்துக் கொண்டு நின்ற கையின் பிடியுள்ளிருந்து, கிருஷ்ண விக்ரஹத்தின் கழுத்து எட்டிப் பார்த்தது. அதற்கு விழி பிதுங்கிற்று.

கடைசிவரை, பொம்மையைப் பற்றிய விரல்களைப் பிரிக்க முடியவில்லை. அவள் கூடவே அவள் கண்டெடுத்த விக்ரஹமும் காட்டுக்குச் சென்றது.

உண்மையில் அங்கச்சிதான் ஏமாந்து போனவள் என்று தோன்றுகிறது.

மாலை வேளை.

நான் நடை வழியில் உட்கார்ந்து ஸ்வாரஸமாய்ப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

சுவாமி விளக்கை ஏற்றிவிட்டு, அம்மா அவசரமாய்,கொல்லைக் கதவை மூடுகிறாள். எனக்கு இருட்டுகிறது. "ஏனம்மா?’’

"உஷ்! சித்தேயிரு, இல்லாட்டா லஷ்மி போயிடுவாள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/225&oldid=1285652" இலிருந்து மீள்விக்கப்பட்டது