பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அருணகிரிநாதர் டிறத்தையும் மனதார வாயாரச் சுவாமிகள் பல பாடல் களில் எடுத்தெடுத் துரைத்துள்ளார். இது மட்டுமல்ல; கந் தரந்தாதி 29-ஆம் செய்யுளில் சம்ப்ந்தப் பெருமானை யன்றி வேறு தெய்வமே இல்லை என்றும் திட்ம்பட உரைத்தனர். இதனை மேலே கந்தரந்தாதி ஆராய்ச்சிப் பகுதியிற் காண லாகும். - பின்னர்த் தெற்கே திரும்பி (197ஏ)1 ஜெகந்நாதம், (198) விசுவை (விசாகபட்டினம் 995) ஆதிய தலங்களைத் தரி சித்துத் (189) திருத்தணிகைக்கு வந்து முருகர்! நீ மகிழும் படி நான் இத்தலத்திலேயே தவநிலையிலிருந்து உனக்கு அடிமைப் பணி செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும் படி நீ கண் பார்த்தருள வேண்டும் 'திருத்தணி யிருக்கும் பெருமாளே! உனது சித்தங். - . . . களிகூரத் .. தவக்கடல் குளித்திங் குன்க்கடிமை யுற்றுன் ங் ! தலத்தினி லிருக்கும் படி பார்ாய்” எனப்பிரார்த்தித்தனர். இந்தப் பிரார்த்தனையை அடியவ. ரிச்சையில் எவை எவை யுற்றன. அவை தருவித்தருள் பெருமாள் எவ்வாறு முடிவு செய்தனர் என்பது பின்னர் விளங்கும். பின்பு தணிகையினின்றும் நீங்கித் தம்மை முருகவேள் ஆட்கொண்ட இடமாம் திருவண்ணுமலைக்கு வழி நடந்தனர். வழியில் ஆரணித் தாலுக்காவில் உள்ள புத்துரைச் சேர்ந்தார். அண்ணுமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நியமந்தவருது பூஜை செய்து வந்தவரும் அமணர் குலத்தைக் கண்டித்தவரும், அரிய தவராஜ ராஜராக விளங்கினவரும், பெரும் புகழ்ப்பெற்ற வருமான சோமநாதன்' என்பவர்2 புத்தூரில் தமக் (262). 1. ஜெகந்நாதம்-வைப்புத்தலம் 1804, 2. புத்துாரில் உள்ள சிவாலயத் திருமதிலிற் காணும் சாச ன்ம் ஒன்று (கி.பி. 1370) அம்மையப்பரான சோமநாத ஜியர்க்கு இப்புத்துார்க் கோயிலும் மடமும் உரிமையாக உதவப் பட்டனவாகத் தெரிவிக்கின்றது. (சாசனத் தமிழ்க் கவி சரிதம்-பக்கம் 125-126.) -