பக்கம்:அவள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் ஒய்வதில்லை



டத்தடி காலியில்லை என்று எட்டத்திலிருந்தே தெரிந்ததும் பெரும் ஏமாற்றமும் கோபமும் வந்தது. ஆனால் என்ன செய்யமுடியும்? வாடகைக்கா எடுத்திருக்கிறேன்? வந்த வழியே திரும்பிப் போய்விடலாமா? ஆனால் கால்கள் கெஞ்சின. பிரசிடென்சி காலேஜ் மணிக் கூண்டிலிருந்து சாந்தோம் மாதா கோவில் தாண்டி அலையோரமா இவ்வளவு தூரம்—கிட்டத்தட்ட எலியட்ஸ் பீச்—இந்த வயதில் சுலபமாயில்லை. சற்று உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் கிளம்பணும்.

அதுவரை அவள் அவரைப் பார்க்கவில்லை. அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கரைக்கு ஏறுகையில் அந்த இடம் சற்று செங்குத்தாய், சிரமமாய்த் தானிருந்தது. நெட்டையில் உயரம் கூடுதலாய்த் தோன்றிய அவரைக் கண்டதும், எழுந்திருக்க ஆரம்பித்தாள்.

"நோ ப்ளீஸ்" அவசரமாய்த் தடுத்து நிறுத்தினார். "இங்கே உட்கார்ந்து கொள்கிறேன்."

இடம் விடும் பாவனையில் (இடத்துக்கா குறைச்சல்?) தான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே தன்னை ஒடுக்கிக் கொண்டாள். அமர்ந்தார். அருகில் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/427&oldid=1497292" இலிருந்து மீள்விக்கப்பட்டது