பக்கம்:அவள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

லா. ச. ராமாமிருதம்

“Some brain fever போலத் தோன்றுகிறது. எப்படி இவ்வளவு சுருக்க develop ஆச்சு? என்ன நேர்ந்தது?”

“தெரியல்லே டாக்டர். டெஸ்கில் எழுதிக்கொண்டிருந்தவர், திடுக்கினு பக்கவாட்டில் சாய்ஞ்சவர் நாற்காலியையும் தன்மேல் தள்ளிக்கொண்டு விழுந்துட்டாராம். மூணு நாளா லேசா ஜுரம்தான் அத்தோடு நடமாட்டம். ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வீட்டில் இருங்கோளேன்னு சொல்லிப் பார்த்தேன். Account closing, எல்லாம் ஜலதோஷ ஜூரம்தான், போயே ஆகணும்'ணுட்டார். பிற்பகல் மூணு மணி வேளைக்கு, வண்டியிலிருந்து ரெண்டு பேர் தூக்கிண்டு வந்து படுக்கையில் கிடத்தினபோதே நினைப்பு இல்லை.”

'ஹும்—உள் ஜன்னி. ஆஸ்பத்திரிக்கு உடனே remove பண்ணியாகணும், திவாகர். டாக்ஸியை அனுப்பிச்சுட்டேளா? No. இங்கிருந்து G.H. 23 கி.மீ தாங்குமா? இந்த நிலையில், வழியில் ஏதானும் ஆச்சுன்னா? அவருடைய உரத்த சிந்தனை வயிற்றில் புளியைக் கரைத்தது.

“He should be touching 108. We will get some ice and rub him. இங்கே, நம் அவசரத்துக்கும் தேவைக்கும் கிட்ட ice கிடைக்காது. மருந்து, ஊசி? No, I won't touch him now. The crisis must pass. அப்பப்போ எனக்கு போன் செய்யுங்க. ஒரு பன்னிரண்டு மணிவாக்கிலே வந்து பாக்கறேன். ஏம்மா உங்க வீட்டு மனுஷா, அவங்க வீட்டு மனுஷா? எல்லாரும் ஊரிலேயா? நெனைச்சேன். இந்த சமயத்திலே துணைக்காச்சும் பக்கத்திலே ஆள் இல்லாட்டி கஷ்டம தான்—”

அவர் போனபிறகு ஒரக்கண்ணால் கவனித்தேன். ஒரு தீர்க்கம் தவிர, அந்த முகத்தில் ஏதும் படிக்க முடிய வில்லை. அது கவலையா, பயமா, சொல்ல முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/120&oldid=1496924" இலிருந்து மீள்விக்கப்பட்டது