பக்கம்:அவள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 லா. ச. ராமாமிருதம்



அதுவே ஒரு விபரீதம்தான். நேரத்தின் ப்ருகடை முறுக்கேறியிருந்தது. பின்! இன்னமும் ஏறப்போகிறது. உள் பீதியினால்தான் அவளுக்கு இந்தத் தனி ஒளி:

Stroke பாஸ்கர்? பக்கவாதத்தில் கொண்டு போய், விடுமோ?

Typhoid: ஆனால் அது இப்படித் திடீர் மூட்டமாய்க் கவியுமோ?

Typhus’ நம் ஊரில் சகஜமாக இது கிடையாதே!

மெனஞ்சிட்டிஸ்?

எனக்குத் தெரிந்த பெயர்களை உதிர்த்து, என் அசடு தான் அம்பலமானது எனக்கே தெரிகிறது. ஆனால் இடம், பொருள், ஏவல், இங்கிதம் இன்றி, எந்த இடத்திலும், எப்படியும் தன்னை ஸ்தாபித்துக் கொள்வதில்தான், மனிதனுக்குக் குறி. அதுவும் காரணம் டயம்தான். தன் அநிச்சயத்தின் பயம், சர்வம் பயமயம் ஜகத்.

இருவரும் கட்டிலின் இரு பக்கங்களில், எதிருக்கெதிராய் உட்கார்ந்திருக்கிறோம்.

சுவர்க் கடிகாரத்தில், முட்கள் இரக்கமற்ற தங்கள் மாறாக்கதியில் சேர்ந்தவண்ணம், காலத்தை தன் அதமத்துக்குப் பொறுத்த அளவில் தனித்தனித் தெறித்து பெரிது பெரிதாக அளந்துகொண்டிருக்கின்றன.

நாங்களும் பொய்.

நீயும் பொய். உன் லயத்தில் உன்னை ஏமாற்றிக் கொள்ள எங்களைப் படைத்தாய்.

பொய் படைத்த பொய்மேல்பொய், ஒன்றையொன்று விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

மணி எட்டு, ஒன்பது, பத்து என்பதில் என்ன தென்போ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/122&oldid=1496934" இலிருந்து மீள்விக்கப்பட்டது