பக்கம்:அலைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 O லா. ச. ராமாமிருதம்

 யெடுத்து-வாசலில் 'கொல்'லாயிட்டுது-எங்கள் அத்தனை பேருக்கும் எதிரிலே மாமி மடியிலேயே -

வீட்டுக்காரர் கையை வீசிய வேகத்தில் ஒரு தேங்காய் அதன் வரிசையிலிருந்து பிசகி உருண்டு கீழே விழுந்து 'பொட்'டென்று உடைந்து சிதறிய இளநீரில் வாயைப் பிளந்தது. முதுகுத் தண்டு 'சில்'லிட்டது. அவருக்கு லேசாய் மூச்சுத் திணறிற்று.

எங்கள் அதிர்ச்சி இருக்கட்டும்-

மாமி?

தாங்கள் எல்லோரும் ஒருமுகமாய்-

மாமி?

மாமி தன் மடியில் கிடந்த முகத்தை இரண்டுமுறை தொட்டு அசைத்துப் பார்த்தாள். தலை பூட்டு கழன்று துவண்டது.

இருந்தாற்போலிருந்து ஒரு சிரிப்பு கிளம்பிற்று பாருங்கள், அது மாதிரிச் சிரிப்பை நாங்கள் ஒருத்தருமே எங்கள் வாழ்நாளில் கேட்டதில்லை; இனிமேல் கேட்கப் போவதுமில்லை.

அதென்னவோ ஜன்மேதி ஜன்மத்திற்கும் புரியாத ஒரு புதிர், திடீரென்று அவிழ்ந்த வேடிக்கையின் தெறி மணிகள் நாலா பக்கமும் உருண்டோடின மாதிரி, அப்படி ஒரு சிரிப்பு.

அது மாமி குரல்கூட இல்லை.

எத்தனையோ நாள் காத்திருந்து இந்தச் சமயம் பார்த்து அவளுள் எது புகுந்து கொண்டதோ அதன் குரல், அதன் சிரிப்பு

அந்தச் சிரிப்புத்தான் மாமியிடம் கடைசியாய்க் கேட்ட ஒலி. அப்போதிலிருந்து மாமிக்கு வாய் அடைத்துவிட்டது.

அத்தோடு இல்லை.

கட்டிடத்துடன் பூமியை வாங்கிக் கொண்டவன் பழைய கட்டிடத்தை அடியோடு இடித்து, தன் இஷ்டத்துக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/148&oldid=1288536" இலிருந்து மீள்விக்கப்பட்டது