பக்கம்:அலைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 வித்தும் வேரும் O 187

 அப்படி விழும். அப்புறம் பிட்டுக்கு சாமி மண் சுமந்தப்போ அவர்மேல்பட்ட அடி, உலகத்தின் முதுகிலேயே விழுந்ததுன்னையே? அப்புறம் அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயிலே மண்ணுன்னே! எல்லாம் நீயே சொல்லிட்டு நீயே முழிக்கறையேப்பா!"

நல்லவேளை என் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை. "நான் போறேம்பா, என் ப்ரண்டைப் பார்க்கணும்னு ஆசை வந்துடுத்து!!"

கூவிக்கொண்டே கீழே ஒடிப்போய் விட்டான்.

ஸைந்தவி, தான் வாய்விட்டுக் கேளாத கேள்விக்கு, என்னிடம் இல்லாத பதிலுக்குக் காத்திருக்கிறாள். அவள் கண்கள் குற்றம் சிந்துகின்றன. கண்கள் கேட்கின்றன.

ஜாக்கிரதை, ஜாக்கிரதை என்றீர்களே, அன்னிக்கு மன்னிச்சுக்கோ என்றீர்களே, உங்கள் ஜாக்கிரதையும் கேட்ட மன்னிப்பும் என்னவாச்சு? நீங்கள் மன்னிப்பு கேட்டு நான் மன்னித்து விட்டதோடு தீர்ந்து போச்சா?

"ஸைந்தவீ, மன்னிப்பு என்பது ஒரு புழுகு; மறதியை வளர்க்க மனம் கண்ட மார்க்கம். சுரணையை ஒடுக்கி, ஒரு வேதனையிலிருந்து இன்னொரு வேதனைக்கு நழுவி உழலும் வழி" -

என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நாவில் எழுவது?

‘ஸைந்தவி என்னை மன்னித்து விடு!’

ஆனால் அதையும் நான் சொல்லவில்லை. விழுங்கி விடுகிறேன். சொல்லி ஆவது என்ன? பொய்யைத்தான் மறுபடியும் நிறுவுகிறேன், என் வித்தை மறுக்கிறேன்.

ஸைந்தவீ, உனக்குப் பதில் என்னிடம் இல்லை. என்னை கையும் களவுமாய்ப் பிடிபட்ட குற்றவாளியாக்கப் பார்க்கிறாய். நான் குற்றவாளியில்லை. ஆனால் மன்னிப்புக் கேட்கிறேன், நான் குற்றவாளியில்லையென்று உன்னிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/189&oldid=1290267" இலிருந்து மீள்விக்கப்பட்டது