பக்கம்:அலைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கிருந்தோ வந்தேன் O 175


"சே, சே.”

"வேணாம்."

"பூ...?"

பையனைத் தூக்கிட்டு சிரிச்சுட்டே சின்னவர் வெளியில் வந்தார்.

"சாமியாரே, பையனுக்கு உங்ககிட்டே படுக்கணுமாம். புள்ளே பிடிப்பான்னு அண்ணி பயப்படுது. என்ன சொல்றீங்க?”

பதிலுக்கு நேரமில்லே. பையன் என்னண்டை தாவிட்டான்.

என்னிடம் வந்தாலும் அவன் வெகு நேரம் தூங்கல்லே. என் கழுத்தைக் கட்டி நெறிக்கறதும் முகத்தோடு முகம் வெக்கறதும் என் கையை இழுத்து இழுத்துத் தன் மார் மேலே வெச்சிக்கிறதுமா, பாம்பின் சுருள் பதுங்கலில் பாஞ்சு கடிச்சுட்ட ஏதோ பழம் நினைப்பில் தவியாத் தவிக்கிறான். தான் நினைச்சது நானில்லே தனக்குத் தெரியுது. ஆனால் நினைச்சது கிடைச்ச மாதிரி நினைச்சுப் பாத்துக்கறான். அப்படியே தேடித்தேடி ஒஞ்சு கண்ணசந்துட்டான். பாலன் களை முகத்தில் களைப்புப் பார்த்து நெஞ்சடைக்குது. இவனால்தானே இந்த வீட்டில் எனக்கு இவ்வளவு கவனம்! அவன் காலை எடுத்துக் கண்ணில் ஒத்திக்கிறேன். என்னை வெள்ளம் அடிச்சுட்டுப் போவுது என் நினைப்பு ஒரு நொடி என்னண்டையில்லே. இல்லாமலே போயிட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்!

ஆனால் காலை யாரோ என்னிடமிருந்து பிடுங்கறாங்க திடுக்குனு முழிச்சுக்கிட்டேன், அவள் தாய்,மவனை என்னிடமிருந்துவாரிக்கிட்டாங்கா. பையன் தூக்கத்தில் 'அப்பா'ன்னு முனகினான். அவங்க உள்ளே போறப்போ அவங்க புடவைத் தலைப்பு என் முகத்தில் பட்டுது. எனக்குக் கால்கட்டை விரலிலிருந்து உச்சி மண்டை வரை உடம்பு 'ஜிவ்' விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/177&oldid=1290253" இலிருந்து மீள்விக்கப்பட்டது