பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 16



2. பூம்புகார்

“திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு.”

- என்பது ஒளவையாரின் அமுதமொழி.

அதற்கொப்ப தங்கள் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டு-

சீரும் சிறப்புமாய்த் தொழில்புரிந்து பொருள் குவித்தவர்கள் செட்டி நாட்டைச் சேர்ந்த தனவணிகப் பெருமக்களாவர்.

இவர்கள், தளராத ஊக்கமும்; விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், தெய்வபக்தியும் உடையவர்கள்.

நாட்டுக்கோட்டை செட்டியார்-
தனவணிகர் -
நகரத்தார்... என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்களுக்கு ஒரு நீண்ட சரித்திர பரம்பரை உண்டு.

சுமார் 1800-ஆண்டுகளுக்கு முன்னர் காவிரிப் பூம்பட்டிணம் என்னும் அழகிய நகரில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

இந்நகரம் மாயூரத்திற்கு அருகில், காவிரி ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் அற்புதமாய் அமைந்திருந்தது.

சோழ வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில், தலை நகரமாக காவிரிப் பூம்பட்டிணம் சீரும் சிறப்புடனும் விளங்கி வந்தது.

சோழ மன்னர்களின் ஆதரவில், கலைகளும், இலக்கியமும் இங்கு வளர்ந்தன.