பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15



8

பட்டம் பெற்றோரே ! உமது தெளிவுரை கிடைத்தது மக்கள் இது போன்ற விளக்கம் பெற்றிடவேண்டும் என விழைகின்றேன்.

அறியாமை, வறுமை ஆகியவற்றினை ஒட்டிடும் ஆற்றல் படை திரட்டிடப் பல்கலைக்கழகம் ஏற்ற இடம் என்பதால் இவற்றினை விரித்துரைத்தேன்.

பயிற்றுமொழி, பாடமொழி, ஆட்சிமொழி, இணைப்பு மொழி என்னுஞ் சொற்ருெடர்கள் வேகமாக உலாவிடக் காண்கின்றோம்.

தாய்மொழி என்னும் தகுதிக்கு ஈடாகவேனும் எந்தத் தகுதியையும் ஒரு மொழி பெற்றிடத்தேவை இல்லை. ஆயினும், நமது தமிழ்மொழி, நமது தாய்மொழி என்பதால் மட்டுமன்று, வளமிக்கது என்பதாலும் எவரும் வியந்து பாராட்டத் தக்கதாகிறது. அந்த வளம் கெடாமலும் மேலும் வளரவுமான செயல்களைச் செம்மையாக்கித் தகுவது உமது கடமையாகும். தமிழ் ஆட்சிமொழியாக எல்லாத் துறையிலும் திகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றி பெற்றிட உமது நல்லார்வம் நிரம்பத் தேவை.

9

உலகுடன் ஒட்டி வாழ்ந்திட, உலகின் அறிவுக் களஞ்சி யத்தின் துணைபெற, ஆங்கில மொழியறிவு இன்றியமையாத தாகிறது. இந்தியாவின் பல பகுதிகளுக்கு இணைப்பு மொழி யாகவும் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இணைப்பு மொழியாகவும் ஆங்கிலம் இருந்திடட்டும் என்பதனே நாட்டுப் பற்றற்ற தன்மை என்றும் கூறுவார் .கூறுவார் என்று மட்டுமே குறிப்பிட்டேன்.

கருதுவார் என்று கூறவில்லை,காரணத்தோடு ஆங்கிலம் முன்பு ஆதிக்கஞ் செலுத்தியரின் மொழி என்பதாலே, அதனே இணைப்பு மொழியாகக் கொள்வது தேசியத் தன்மானமற்றது என்று கூறுபவர், அந்த ஆங்கில