பக்கம்:அலைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டாளு O 111

 யில் அவன் கையைக் காலை முறிக்கும் வேளைக்கு, வேலை முடிந்து போயிருப்பாள். மாலை ஆபீஸ்விட்டு எங்கெங்கோ சுற்றிவிட்டு இரவு தான் திரும்புவான்.

புடவை உலர்த்தியபடியே கொடியில் தொங்கிற்று.

மாமனாரிடமிருந்து மஞ்சள் தடவி வந்த கடிதாசின் பின்புறத்தில் சுசியின் பலவீனமான கையெழுத்தில் இரண்டு வரிகள் இருந்தன.

“ஆண்டாளுவை சர்க்கரையை வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள். அறுந்துபோன உங்கள் மூக்கை எடுத்து ஒட்ட வைத்துக்கொள்ளுங்கள்.”


தீபாவளி வந்துவிட்டது.

மூன்று நாட்களாகவே பட்டாசு வெடியும், தெருவில் பசங்களின் ஆரவாரமும் காது பொளிந்தது. ராத்துக்கமே கெட்டது. கண்கள் எரிந்தன.

குறைத் தூக்கமும், அறை விழிப்புமாய்ப் படுக்கையில் இருப்புக் கொள்ளாமல் புரளுகையில், சுசி நினைப்பு எழுந்தது. 'ஏ சுசி, கலியாணமான புதிதில் நான் கண்ட சுசியா இப்போது நீ? சே, இப்போது மாத்திரம் உன்மேல் எனக்கு ஆசையில்லையா? அதற்கென்ன, கொஞ்சம் சீண்டுகிறேன்,அவ்வளவுதானே! அது என்ன கோபமோ, ஆங்காரமோ புர்ர்ர்ர்-ரோ? அதென்ன சொக்கு சொக்கி சினிமாவில் காணற மாதிரி சோகமாய் விழுந்தால்தான் ஆசையா? சுசி,நீ கோபிக்கையில் உன் முகம் எவ்வளவு களை கட்டுகிறது தெரியுமா! சுசி, நான் நல்லவன்தாண்டி! உனக்குப் பிடிக்க வில்லையானால் இனிமேல் சீண்டவில்லை. திருப்திதானே! நீ இல்லாவிட்டால் பொழுதும் போகவில்லை. நினைத்துக் கொண்டு ரயிலேறிவிடும் கிட்ட தூரத்தில் இருக்கையா? தலை தீபாவளிக்குப் பிறகு எப்போது உன் வீட்டுக்கு வந்திருக்கிறேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/113&oldid=1288268" இலிருந்து மீள்விக்கப்பட்டது