பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அருணகிரிநாதர் பிற தலத்துப் பாடல்களிலும் விரவியுள்ளது. மேலும், பெண் சூைைசயே நீக்கரிய ஆசை ஆதலின் அதை ஒழித்தா லொழிய நாம் கரையேறுவது கூடாத காரிய மாகுமாதலின், அதை நாம் ஒழித்துக் கரையேற வேண்டும் என்னும் பெருங் கருணை காரணமாகவே சுவாமிகள் வேசையர் இன்பத் தின் தீமைகளை மிக விரிவாகவும் அழுத்தமாகவும் பன்முறை எடுத்துக் காட்டுகின்றனர். 'தத்தை யங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூருயிரங் கூறிட்டு, அத்தில் அங்கு ஒரு கூறு உன் கண் வைத்தவருக்கு அமருலகு அளிக்கும். நின் பெருமை-எனத் திருவிசைப் பாவிற் கருவூர்த் தேவர் முழங்குகின்றனரன்ருே? சுவாமிகள் அருளிய 'விடமும் அமுதமும்’ என்னும் 516-ஆம் பாடல் ஒன்றே பெண்கள் உருவை நாம் எவ்வண்ணம் உணருதல் வேண்டும் என்னும் உண்மை உணர்ச்சியை ஊட்ட வல்லது. சுவாமிகள் பெறற் கரிய பேற்றைப் பெற்ற தலமாதலின் அவரது சரித்திர சம் பந்தமான விஷயங்கள் பல அருணைத் திருப்புகழ்ப் பாடல் களிற் கிடைக்கின்றன. ஒரு தலத்தைப் பற்றிப் பாடும் பொழுது சுவாமிகள் கொள்கின்ற சில குறிப்புக்கள் உண்டு; (1) தலத்தின் பெயருக்கேற்பச் சந்தத்தை துவக்குவர்: தலம் அருணை’ என்ருல் 'தனன” சந்தத்தில் பாடல் தொடங்கும். (2) தலத்துச் சுவாமி பெயர், தேவி பெயர் கூறப்படும். அருணைத் தலத்துத் தேவி 'உண்ணு முலையின் பெயர் 529-ஆம் பாடலிற் காணலாம். (3) தலவிசேடம் முதலியனவும் எடுத்துக் கூறுவர். கெளதம முநிவர் பூசித்த தலம் அருணை’ என்பதை 516-ஆம் பாடலிலும், தேவி அருணையில் (தவங் கிடந்து) இடப்பாகம் பெற்றதை 530, 531-ஆம் பாடல்களிலும், இறைவர் ஜோதியாய் நின்றதை யும், திருமால், பிரமாவுக்கு எட்டாது நின்றதையும் 535, 563 எண்களுள்ள பாடல்களிலும், முருக வேள் குரு மூர்த்தியாய்த் தம் முன் தோன்றித் திருவடி சூட்டி, மெளைேப தேசஞ் செய்து ஆட்கொண்டு தெளிவு தந்ததை 515, 550-ஆம் பாடல்களிலும், சிவபிரான் (அண்ணுமலை யார்) திருநீறளித்துத் தமது துயரைத் தீர்த்ததையும்,