பக்கம்:அவள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

63

அவளுடைய புன்னகை, பழத்துள் இறங்கும் கத்தி போல், d—n her!

எதிர்ப்பு எனக்குப் பழக்கமில்லை. ஆகையால் பிடிக்கவில்லை, கசந்தது.

But resistance is beautiful; and is a challenge.

அன்றிலிருந்து உன் வீட்டுக்கு வர ஆரம்பித்தேன். The challenge. பாஸ்கர், சவாலை ஏற்கணும், இல்லையா?

நெற்றியில், உழைப்பின் வேர்வைமுத்துக்கு இத்தனை அழகு இருக்குமா, என்ன? உழைப்பே அறியாத எனக்கு அது precious ஆகப் படுகிறது.

“எனக்கே வேர்க்கும் சுபாவம்.” அவள் சிரிக்கையில் வலது கன்னம் குழிகிறது. அவள் கன்னங்களில், மூக்கு நுனியில், மோவாயில் ஆரோக்யத்தின் எண்ணெய்ப் பிசுக்குப் பளபளக்கிறது.

“நான் கிராமத்துப் பெண். கிராமத்திலிருந்து போய்த்தான் காலேஜ் படித்தேன். தினம் பஸ். வீட்டில் எப்பவும் சுமைவேலை இருந்தபடித்தான். பெரிய குடும்பம், அதனால் வேலை செய்யாமல் இருக்க முடியாது. இங்கே என்னதான் இழுத்து விட்டுக்கொண்டாலும் என்ன சொப்பு வைத்து விளையாடுகிற மாதிரி—எதிரும் புதிருமாய் இரண்டு பேருக்கு இருக்கிற வேலைதானே இருக்கும்! மிச்சப்போதுக்கு, கொட்டடா குடையடான்னு, பொழுதைச் சுமக்க முடியவில்லை! இம்சையாயிருக்கு. மத்தியான்னத் தூக்கம், பத்திரிகைகளில், பொம்மைப் பக்கங்களைப் புரட்டுவது, அக்கப்போர்—எல்லாம் இனி மேலதான் பழக்கிக்கணும்.” மறுபடியும் அந்தச் சிரிப்பு.

“ஏன் நீயும் வேலைக்குப் போகலாமே. ஏற்பாடு பண்ணட்டுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/107&oldid=1496869" இலிருந்து மீள்விக்கப்பட்டது