பக்கம்:அவள்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472 லா. ச. ராமாமிருதம்



கொண்டு வந்து வைக்கும் டிபனும் காப்பியும் A 1. எனக்குத் தேவையும்கூட. இல்லாதவனுக்குத்தான் பசியும் கூடுதலாகக் காண்கிறது.

வீட்டை விட்டுப் பதினைந்து வயதில் ஓடி வந்து ராவுக்கு இவர்கள் வீட்டுத் திண்ணையில் ஒதுங்கினவனை தாரகராமனின் தாயார், முகம் பார்த்து உள்ளே அழைத்துச் சென்று அன்னமிட்டதுடன் அன்று தங்கினவன்தான்...

("எங்கேடா போறே?ன்னா காசிக்காம். காசிக்கப் போற வயசைப் பாரு! நானே இன்னும் போன பாடு இல்லே!"-பெரிய பித்தளைப் பீப்பாய் போல் பாட்டி குலுங்கக் குலுங்கச் சிரிக்க நானே கேட்டிருக்கிறேன்!)

சமையலே பாட்டியிடம்தான் கற்றுக்கொண்டேன். அவனைப் படிக்க வைக்க இவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை. 'கரண்டி ஆபீஸ் எனக்குப் போதும்' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.

ஸாருக்கும் அவனுக்கும் பிடிப்பு கூட. ஏறக்குறைய இருவரும் சமவயது.

"என்னை ரொம்ப நாளைக்குப் பேரைச் சொல்லித் தான் அழைத்துக் கொண்டிருந்தான். 'கட்சிக்காரன், பெரிய மனுஷா நாலுபேர் வந்திருக்கிற சமயத்தில் மானத்தை வாங்காதேடா' என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நாலுபேர் நடுவில் அவன் வாயில் நான் 'ஸார்’ ஆக மாறினேன்...ஆனால் அவனை நம்ப முடியாது!’-அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்.

சாம்பசிவன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் பாச்சா பவிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/516&oldid=1497638" இலிருந்து மீள்விக்கப்பட்டது