பக்கம்:அவள்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510 லா. ச. ராமாமிருதம்



காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.

'அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?’’

'பாட்டி! பாட்டி? நான் ஒண்னுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சண்டு வந்து இதோ பாரு அம்மா'ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனியவெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ'-பையனுக்குச் சொல்லும்போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அனைத்துக் கொண்டார்.

'இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு. உன்னை என்ன பண்ணால் தகாது?’

அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.

'நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ, ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தை கொண்டாடிக்க நானும்தான் பிள்ளையைத் தோத்துரட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி ஏறிஞ்சுட்டு வளையவல்லை?”

மன்னி சீறினாள். 'உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?"

நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசறவாளும் இருக்காளா? இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/554&oldid=1497340" இலிருந்து மீள்விக்கப்பட்டது