பக்கம்:அவள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 223

கேட்க மாட்டேன்.

கண்ணனுக்குப் பந்து.

ராஜுவுக்கு சிகரெட்.

விஜிக்கு 'லாலி பப்பு’

ராதைக்குச் சினிமா.

சேகர்தான் பாவம்! கொஞ்சம் திண்டாடுவான்.

பிறகு அவனும் சரியாகி விடுவான்.

வாழ்க்கையே மறதியின் வெற்றிதானே.

"நான் ராஜுவின் தோள்மேல் கை வைத்தேன்.

  • ராஜூ, Dont bother. நான் எங்கே காட்டுக்கா போய்விட்டேன்? எனக்குத் தோன்றும்போது வருகிறேன். நீங்களும் என் ரூமுக்கு வாருங்கள்! இன்று நேரமாகி விட்டது. நாளை காலை வா, உன் பேரில் பேங்கில் கணக்கு வைக்கணும். குடும்பத்தை இனி நீதான் பார்த்துக்

கொள்ள வேண்டும். நீ வேலைக்குப் போக ஆசைப்படுவதாக உன் அம்மா சொன்னாள். நாளைக்கு உனக்கு ஒரு சிபாரிசு கடிதாசு தருகிறேன். உனக்கு வேலை கிடைக்கும்."

ராஜுவுக்கு முகம் மலர்ந்தது. உடனே அடக்கிக் கொண்டான்.

"என்னப்பா இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் வீட்டில் நடந்திருக்கு. அதைவிட நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்படியாக என்ன நேர்ந்துவிட்டது?

"நீ சொல்வது சரிதான். ஆனால் பெரிய வெடிக்கு தீவட்டியை வெச்சுத்தான் கொளுத்தணுமா? சின்னத் திரி போதாதா? எனக்கும் வயதாயிற்று. குடும்பத்தை விட்டு ஒதுங்க எனக்கு வேளை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளேன்! இளவெட்டுக்கள் உங்களுக்கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/267&oldid=1497452" இலிருந்து மீள்விக்கப்பட்டது