பக்கம்:அவள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜனனி 147

'நன்னாச் சொல்லுங்கோ ஜனனி கவலையை ஜனனி இதுவரை பட்டதில்லை அவளைப் பெத்தவா கவலையை நீங்க வாங்கிண்டு, ஆத்துக்குக் கொண்டு வந்தட்டேள். வளத்த கவலையை நான் பட்டாச்சு . கல்யாணமானாக் கஷ்டம் விடியுமான்னா, அவள் புகுந்த கவலையையும் பட்டுண்டிருக்கோம் இன்னும்-போறுமோன்னோ-திருப்தியாச்சா?”

வார்த்தைகளால் குத்தி வாங்குவதில், அம்மாள் அலாதி வரப்பிரசாதி. ஐயர் அப்படியே தலை கவிழ்வார்.


னனி ஒருநாள் பகலில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தாள். கிணற்றடியில் குளிப்பதைவிட, குளத்தில் துளையத்தான் அவளுக்கு இஷ்டம். அம்மாளுக்கும் அவளுக்கும் இதைப்பற்றி வேண்டிய தகராறு உண்டு. அம்மாள்-ஒன்று சொல்லவேண்டும்-படி தாண்டாள்; வம்பு எல்லாம் அவளைத் தேடிக்கொண்டு வருமேயொழிய, அவளாக வம்பைத் தேடிக் கொண்டு வெளிக் கிளம்பியதில்லை.

'மேட்டிமைக்காரி, ராங்கி’ என்று பொறாதவர் குற்றம் சொன்னாலும், அம்மாளை நேரில் கண்டால் எல்லோருக்கும் பயந்தான். அத்தனைக்கத்தனை ஜனனியின் கலகலப்பு அவர்களுக்கு, (நல்ல எண்ணமோ கெட்ட எண்ணமோ) குதூகலமாய்த்தான் இருந்தது.

ஜனனி ஒருநாள் பகலில் குளித்துக்கொண்டிருந்தாள்.

திடீரென்று தன்னை யாரோ ஊன்றிக் கவனிப்பது போன்ற உணர்ச்சி எழுவதை உணர்ந்த ஸ். சுற்றுமுற்றும் நோக்கினாள். எதிர்க் கரையில் ஒருவன் தன்னையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் முகத்தைப் பார்க்கவில்லை. தன்னிடம் என்ன என்று பார்த்துக்கொண்டாள். வலது விலாப்புறத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/191&oldid=1496955" இலிருந்து மீள்விக்கப்பட்டது