பக்கம்:அவள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோடு 109


"வழிப்போக்கன் என்றால் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள்? சன்னியாசியா?”

"நான் சன்னியாசி இல்லை. வழிப்போக்கன் என்றால் வழிப்போக்கின் கால்பாேன வழி, போய்க்கொண்டிருப்பவன். கால்நடையாக நம்நாடு பார்க்க ஆயுசு போதாது.”

"தேசாந்தரியா?"

"அப்படியும் கொள்ளலாம்... அடேடே!"

"என்ன?"

"குழந்தை, மடியை நனைத்துவிட்டாள்."

அவர் சொன்னது உறைக்க அரைக்கணம் சென்றது. உறைத்ததும் அவனுக்குச் சீற்றம் பொங்கிற்று. அடிக்கக் கை ஓங்கிவிட்டான்.

"'அவளைத் தொடவேண்டாம்'-குரல் என்னவோ மெத்துத்தான். ஆனால், அதில் ஒரு எஃகை அவன் இப்போது உணர்ந்தான். அவன், அவளைத் தொட மாட்டான். அதையும் உணர்ந்தான்.

"அவள் இதுபோல் இருந்ததில்லை.";

"அப்போ இது அவள் விளையாட்டு."

"எவள்?"

"எனக்கு ஒரு அவள்தான் உண்டு. அவளே தான் எல்லாம். நம் அவலத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறாள்."

"என்ன அவலம்?" - "குழந்தையின் ஸர்வ சகஜமான செயலில், சொந்தத்தில் ஏதோ அவமானம் நேர்ந்துவிட்டதாகப் படித்தாகிறது அல்லவா? தன்மடியில் ஸ்கஜம், அதுவே பிறர் மடியில் அவமானம். அதுதானே?"!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/153&oldid=1497049" இலிருந்து மீள்விக்கப்பட்டது