பக்கம்:அவள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உச்சி வெய்யில் 95


"வளைஞ்சு வளைஞ்சு உள்ளே ரொம்ப துரம்: போவுதுடா. போவப் போவ அம்போன்னு இருட்டு. திரும்பிடலாமான்னு ஒரு சமயம் நெனச்சேன். ஆனால் வழி தெரியல்வியே! இனிமே ஆத்தா தம்பி தங்கச்சியைப் பாக்கப் போறேனான்னு அளுகை வந்திருச்சி. சமயத்துலே கறுப்பு கலைஞ்சு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமா விட்டுக் கொடுத்து, நடக்க நடக்க விரிஞ்சுக்கிட்டே போச்சு. திடீர்னு இடம் அகலமா அறையாட்டம் பெரிஸ்ஸா, நடுவுலே நிக்கிறேன். ஓரமா பாறையிலே அலுமாரியாட்டம் ஒரு பொந்துலே அம்மன் சிலை. இன்னும் உருவாயிட்டே இருக்குது. குந்தியிருக்கா. தடால்லு விளுந்து ஆத்தாளைக் கும்பிட்டேன். என்னைப் பார்த்து சிாிச்சா."

அப்படி விடறா டகல்" -

"என் தலைமேலே கையை வெச்சு சொல்றேன், விட்டேன்னு சொல்லு. நீ சொல்லமாட்டே. நான் சொல்றேன். அப்போ அந்த அறையிலே மூலையிலே இன்னொரு பாதை தெரியுது. அது வழி பத்தடி நடந்தேன். ஒரு திருப்பத்துலே சட்டுனு வெளிலே வந்துட்டேண்டா. சந்தோசத்துலே சுத்திச் சுத்தி வந்து, வந்த வழியைத் தேடினால் சிக்கல்லே. கிடைக்கல்லே. நான் உள்ளே போனது அற்புதம், கண்டதும் அற்புதம், வெளியிலே வந்தது அற்புதம்.”

அவர்கள் போனபின்னர் அந்தப் பையன் சொன்னது வெகுநேரம் புரிந்தும் புரியாமலும் உறுத்திக்கொண்டிருந்தது.

பகலும் இரவுமாய் மாறி மாறி நாட்கள் நகர்கின்றன. ஒரு சமயம் ஒடுகின்றன. ஒரு சமயம் தயங்குகின்றன. ஆனால் எந்த சமயமும் நின்றதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/139&oldid=1496984" இலிருந்து மீள்விக்கப்பட்டது