பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குத் தியாகம் செய்யத் தீரம் வேண்டுமே, அது ஏது உங்களுககு” வேண்டாமே!-கான் சொல்லும் போர் கத்தி யில்லாத போர்; சத்தமில்லாத போர்! நான் சொல்லும் புரட்சி அன்புப் புரட்சி, இன்பப் புரட்சி!-அதைச் செய்ய நீ மட்டும் என் தோளோடு தோள் சேர்ந்து கின்ருல் போதும்; அப்புறம் பார் இந்த உலகத்தில் நாம் எத்தனை பேருக்கு வழிகாட்டிகளாய் மாறிவிடு கிருேம் என்று?”

ஐயோ! இந்த அழகான உலகத்துக்கு இன்னுமா வழிகாட்டிகள் வேண்டும் இருப்பவர்கள் போதாதா?”

போதாது என்றுதான் ஓடோடியும் வந்தேன். ஏனென்று தெரியுமா, எதற்கு என்று தெரியுமா?" எனென்றும் கான் உங்களைக் கேட்கவில்லை; எதற்கு என்றும நான் உங்களைக் கேட்கவில்லை!”

  • கேட்காவிட்டால் என்ன?-சொல்வது என் கடமை; சொல கிறேன். வாழ்ந்தால் உன் னுடன் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் சாகவேண்டும். இதுவே என் முடிவு; நீ என்ன சொல்கிருய்?-என்ஜனக் காப் பாற்றப் போகிருயா? கைவிடப் போகிருயா?"

கான் மெளனமாயிருந்தேன். சொல் லலிதா? உனக்கு கான் என்ன தீங்கு செய் தேன்?-உனது சோகமயமான வாழ்வைக் கண்டு அனுதாபமுற்றேன்; அனுதாபம் காதலாய் மாறியது -அவ்வளவுதான்! அதற்காக என்னைக் கொன்று விடாதே லலிதா, கொன்றுவிடாதே! கடைசி முறை யாகக் கேட்கிறேன். உங்களை நான் காதலிக்கிறேன்!”