பக்கம்:அலைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஹுதி


யாவதையும் உற்பவிப்பவனும், எல்லாவற்றையும் ஆள்பவனும் இயற்கையை அதன் அநந்த கோடி சாயைகளுடன் தன் இடது சுண்டுவிரலில் சுற்றியவனும், எல்லாவற்றிலும் எல்லாமாயும், எல்லாவற்றிலிருந்து ஒதுங்கியவனும், க்ருபா சமுத்ரமாயும், சம்ஹார மூர்த்தியாயும், நிற்குணனாயும், இல்லாமலே இருப்பவனாயும், சகல ஜீவாதாரனும், சர்வ லீலாகாரனுமாய ஆண்டவன், ஒய்வு ஒழிவற்றவன். பிரபஞ்ச ஆராய்ச்சி கதியில் அழகானதோர் இதயத்தை சிருஷ்டித்தான். லஷிய குணங்களை அதன் உள்ளும் மேலும் சாறு பிழிந்தான்.

ஆண்டவன் அவ்விதய உருண்டையை ஏந்தி அதைத் திருப்பித் திருப்பி அதன் வேலைப்பாடுகளை வியக்கையில் அது கை போலும் ஒளி மருட்சி காட்டிற்று.

ஆனால் ஒன்றையே எத்தனை நேரம் அழகு பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அவனுக்கு ஷணப்போது ஓய்வு ஏது? பொடி நேரத்தின் தடுபடலுள் எத்தனை ஜீவன்கள் பிறக்கவும், சாகவும், உய்யவும் விசுவகர்ப்பத்தில் யுகவேதனையைப் பட்டுத் துடித்துக்கொண்டிருக்கின்றன! அந்த நினைவுதானோ, அகஸ்மாத்தோ அவ்விதயம் அவன் விரல்களிலிருந்து நழுவியது. அண்ட கோசங்களின் அகண்ட வேகக் கடையலில் அகப்பட்டு, சுழன்றுகொண்டே அது ககன வழி இறங்குகையில் அதை எட்டிப் பிடிக்கவும் அவனுக்கு நேரமில்லை. ஷணத்திடையில் யுகப் பிரளய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/61&oldid=1139076" இலிருந்து மீள்விக்கப்பட்டது