பக்கம்:அஞ்சலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 79

அவன் புருவங்கள் சுளித்தன.

“நான் ஒருவனையும் பிச்சை கேட்கமாட்டேன். ஆம். ஆண்டவனைக் கூடத்தான்—முக்கியமாய் ஆண்டவனைத் தான்.”

திகில் மாஞ்சியின் அடிவயிற்றில் திடீரென்று ஜ்வாலை விட்டது. அவளையுமறியாது, அவன் மடியிலிருந்து குழந்தையைப் பிடுங்கிக்கொண்டு, தன்னோடு அனைத்துக் கொண்டாள்.

“ஏன், ஏன் இப்படித் தெய்வகுத்தம் பேசறேள்? இந்த மாதிரி நீங்கள் பேசினால்கூட எனக்கு ‘பக் பக்’ என்கிறது.”

“நீ புரிந்துகொள்ளவில்லை.”

“நான் ஒண்னும் புரிஞ்சுக்க வேண்டாம்.”

அவனை அவள் முகங்கொடுத்துக்கூடப் பார்க்க வில்லை. குழந்தையைத் தோள்மேல் போட்டுக்கொண்ட அதன் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைச் சற்று நேரம் உற்றுக் கவனித்துவிட்டு, வெளியே சென்றுவிட்டான். மாஞ்சி ஜன்னலண்டை போய் அவன் உருவம் மறையும்வரை, மறைந்த பின்னும், அவன் சென்ற திக்கை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

***

பெருமூச்சுடன் மாஞ்சி ஜன்னலிலிருந்து திரும்பினாள். அவளையறியாமலே இமைகள் நனைந்திருந்தன. இன்று ஏனோ இருப்புக் கொள்ளவில்லை. புரியாத ஒரு மனோ வேதனை.

வருடங்களுக்கு அவள்மேல் ஏன் தனி வைரம்? கூந்தல் ஒரு முடிச்சுக்குக்கூட வரவில்லை. இருக்கும் மயிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/89&oldid=1024264" இலிருந்து மீள்விக்கப்பட்டது