பக்கம்:அஞ்சலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஜமதக்னி 55

சேர்ந்து ஓலமிட ஆரம்பித்துவிட்டனர். கீழ்க்கட்டிலிருந்து தூக்கம் கலைந்த குரல்களின் முனகல்கள் எழுந்தன.

“மாஞ்சீ! பார் உன் வேலையை!—”

மாஞ்சி வாயுள் முன்றானையைத் திணித்துக்கொண்டு குழந்தைகளைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

“பாச்சு எங்கேம்மா? பாச்சு ஏம்மா என்கிட்டே தாச்சுக்கல்லே? பாச்சுவை எங்கேம்மா தூக்கிண்டு போயிட்டா ?”

“நீனா தூங்கு!—” மீனா தன் தங்கை வயிற்றைத் தட்டினாள்.

“பாச்சு ஒம்பாச்சி ஆயிட்டான்.”

மீனா நீனாவைவிடக் கொஞ்சம் பெரியவள். ஆதலால் நீனாவைவிட, சமயம், போது, விஷயம் அறிந்தவள். நீனாவுக்குப் பதிலும் சொல்ல அறிந்தவள். அத்துடன் மீனா கொஞ்சம் ‘அத்துரு’.

“பாச்சுவை இனிமே பார்க்கவே முடியாதா?”

“ஓ பார்க்கலாமே! இன்னும் பத்து நாளைக்கப்பறம் ஆத்துலே குத்துவிளக்கேத்துவாளே, அதுலே அவனைப் பார்க்கலாம். இப்போ நம்ம தூங்கலாம்—”

“மாஞ்சி பார்த்தையா, இதுகள் எவ்வளவு சுருக்கப் புது நிலைமைகளுக்குத் தங்களைச் சரிப்படுத்திக்கொண்டு விடறதுகள்! அதுகளின் பேச்சிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது! எனக்கும் மீனா சொன்னது போல்தான் இன்று காலை தோன்றிற்று. என்னையும் உன்னையும், மற்றும் காரியத்தை ஒப்பேற்ற வந்தவர்களையும் காரியத்தில் இயங்குபவர்களாகத் தனியாகப் பிரிந்துப் பார்க்க முடிந்தது. நான் சொல்வது உனக்குப் புரிகிறதோ? இதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/65&oldid=1024067" இலிருந்து மீள்விக்கப்பட்டது