பக்கம்:அஞ்சலி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 111

திரும்பும். அவங்க ரெண்டுக்குமிடையில் ஏதோ ஒரு வகையிலே பேச்சுக்கூட இருக்கும்னு எனக்கு நினைப்பு. அவர் ஏதானும் ஊமைச்சிரிப்பு சிரிச்சுக்கிட்டே வருவாரு. அதுக்குக் கண் பளபளன்னும், நம்ம மனுச சாதியைப் பத்தி ரெண்டுபேரும் வம்பு வளர்த்தியிருப்பாங்கன்னு இப்போ எண்ணறேன்.

“மாடு கல்சட்டியாட்டம் குள்ளமா குறுக்குலே வளர்த்தி. கால்கூட, அதைக் கட்டற முளையாட்டமே குட்டையாயிருக்கும். முதாறு ஆவ ஆவ பாலு கள்ளிச் சொட்டாட்டம் விளுந்த இடத்தை விட்டு நவராமே, கல்கண்டு கட்டியாட்டம் தித்திச்ச நாக்குல தேனொழுவும்.”

பூரணி உள் நோக்கிய பார்வையுடன் தன்னுள் சிரித்துக்கொண்டாள். முதலியார் தன் சமுத்திர மெளனத்துள் காத்திருந்தார்.

ஒருநாள் நாங்க சின்ன பசங்க மண்ணுலே இட்டிலி, புட்டு சுட்டு தோட்டத்துலே விளையாடிட்டிருந்தோம். சடால்னு கப்பு, கீழே தலையைப் போட்டு காலை முறிச்சிட்டு மிரள மிரள முளிச்சிட்டு புஸ் புஸ்ஸுனு மூச்சு விட ஆரம்பிச்சுட்டுது. நான் அப்போ இம்மாத்தம்...” கையைத் தாழ்த்திக் காண்பித்து— “நான் அப்போ இம் மாத்தம் இருப்பேன். அண்ணன் பாத்தூட்டு, ஆத்தாவை அவசர அவசரமா அடுப்புலே சுடுதண்ணி வெக்கச்சொல்லி எங்களை வீட்டுள்ளே துரத்தினாரு. நான் மாத்திரம் ஏன் அவசரம்னு மயங்கி மயங்கி நின்னேன். நான் சுருக்க அடங்கமாட்டேன். அண்ணன் என்னைச் சப்பையிலே உதை கொடுத்து வண்டையா திட்டி உள்ளே விரட்டிச்சு. மத்தவங்கள்ளாம் அண்ணன் என்னைப் போட்ட இரைக் சல்லே பயந்து தெருவுக்கு ஓடிட்டாங்க. எனக்கு ரொம்ப ஆத்திரம். சமயல் வீட்டுலே நுழைஞ்சு அடுப்புமேல் ஏறி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/121&oldid=1025008" இலிருந்து மீள்விக்கப்பட்டது