பக்கம்:அலைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கிருந்தோ வந்தேன் O 167



"குடிங்க குடிங்க! மயங்காதீங்க! கடிச்சுக்கிட்டே குடியுங்க!!

தண்ணி உள்ளே போனதும் முழியும் கீழேயிறங்கி மூச்சும் மேலே திரும்பி - அம்மாடி; திரும்பாத பயணத்துக்கு பணம் கட்டாத டிக்கட் பருக்கை சோறே பத்தும் போல இருக்குதே!

பையன்தான் தலையை அறுத்த கோழியாட்டம் என்னைச் சுத்தி சுத்தி வர்ரான், பிடிச்சு இழுத்துப் பக்கத்துலே குந்த வெச்ச பிறகுதான் மேலே சோறுண்ண விட்டான்.-

பதார்த்தம் ப க் கு வ த் து லே ஒண்ணையொண்ணு மிஞ்சுது, நாக்குலே மணம்தான் தக்குது; அது நிக்கல்லே, அப்படிக் கரையுது. அதுதான் கரையுதோ அல்ல அதை ஆக்கின சுகத்தைக் காட்டிலும் அவங்க அதை வெக்கற அன்பிலே என் மனம் தான் கரைஞ்சு போவுதோ?

இவ்வளவு என்னால் தாங்கமுடியாதப்பா. கைகழுவ எழுந்திருக்கும் வரைக்கும் இருப்பேனோ உருகி ஓடிப் போவேனோ?

ஏன்னு கேட்டால்:

ஆண்டிக் கலயத்தில் வேண்டாப் பொருள்தானே பிச்சையா விழுது!

ஊசிப்போன ரசம்,

காடிப் பழையது.

அடிப் பிடிச்ச சுடயது.

கொளந்தைங்களோ பெரிய வங்களோ அசிங்கமா கொந்திக் கிளறின எச்சில் பண்டம்.

"இந்தா, பண்டாரம் எங்கே பிச்சுட்டு ஒடறே?

இந்தா தோசைப் புள்ளல் சரியாப் பிடி.

இந்தா இப்பவே சொல்லிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/169&oldid=1288556" இலிருந்து மீள்விக்கப்பட்டது