பக்கம்:அலைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கிருந்தோ வந்தேன் O 173



கடிச்சுட்டான். உதிரம் கொட்டுது ஐயாவுக்குத் தெரியல்லே, என்ன சொல்றது?

"சாமி வந்துபோன மூணாம்நாள் காலை குருவிங்க கீச்மூச்சுன்னு வம்படிக்கிற வேளைக்கு, ஐயா கால்வாய்க் கரைக்குப் போனாரு. கூடவே, பையன் பாட்டன் கையிலே ஆறாம் விரலாத் தொங்கிட்டே போனதைப் பார்த்தேன்.

போனாங்க போனாங்க வெய்யில் மஞ்சள் மாறிப் போச்சு; போனவங்க வல்லே, கால்வாய் தாண்டி கழனிக் கட்டிலே ஏத்தக்கேணி கட்டடம் கரைஞ்சுவருது நினைப்பு வந்துட்டுது! வவுறு குபீர்-

கால்வாய்த் தண்ணி காலில் கல்லைக் கட்டி இழுக்குது. கரை தாண்டி வரப்பிலே விழுந்தடிச்சு ஒடினேன். வானம் வாயைத் திறந்துகிட்டு பூமியைக் கவ்வுது. நடுவுலே மாட்டிக் கிட்டு கிணத்தோரம் பையன் கரைமேட்டில் தனியா குந்திருக்கான் என் வவுறு துண்டாச்சு. எட்டிப் பார்த்தேன் அப்பா மிதக்கல்லே. எனக்குத் தெரியும் மிதக்க மாட்டாரு. நீச்சல்லே சூரன். மூணு தென்னைமரம் ஆழம் முழுகி, போட்ட ஊசியை ஒரே மூச்சிலே எடுத்து வருவார்; எனக்குத் தெரியும்.

“அப்பா எங்கே?" தோளைப் புடிச்சுக் குலுக்கினேன். பையன் தன் நினைப்பில்லே; தூக்கிக்கிட்டேன். எப்பவுமே நெட்டி, இப்போ கோழிரக்கையாட்டம் கைக்குத் தூக்கினதே தெரியல்லே. என்னவோ அவன் சத்து அத்தினியும் அவன் கிட்டேருந்து போயிட்ட மாதிரி, பேயறைஞ்சுட்ட மாதிரி.

"அப்பா எங்கே?"

வாய் சிமிழாட்டம் திறந்து மூடுது; ஆனால் அதில் பேச்சு ஒடிப்போச்சு.

“ஐயா எங்கே?’

வெள்ளை முழியிலே பாப்பா தெறிக்குது. ஆனால் கண்ணிலே குறிப்பில்லே. ஒன்பதேகால் அரக்கோணம் 'பெஸல்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/175&oldid=1290250" இலிருந்து மீள்விக்கப்பட்டது