பக்கம்:அலைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 O லா. ச. ராமாமிருதம்


குரல் கேட்டு திடும்புனு திரும்பினா இளையவர் கையிலே மடிச்ச துண்டைத் தாங்கிட்டு நிக்கறாரு துண்டை என்னண்டை நீட்டறாரு,

"சுருக்க ஈரத் துவட்டுங்க. இந்த தண்ணி ஜீதளம்."

எனக்கு உடம்பு பதறிப் போச்சு.

"எசமான் ஏழைமீது உங்கள் கருணை ஏற்கெனவே எனக்கு வாயடைக்குது. இனியும் சோதிக்காதீங்க. இத்தனைக்கு தான் தகுதியில்லே. எனக்கே தெரியும்."

அவர் குஞ்சிரிப்பா சிரிக்கறாரு.

"ஈதெல்லாம் உங்களுக்குன்னு நீங்க ஏன் நினைக்கிறீங்க? ஈதெல்லாம் நாங்க எங்களுக்கே செய்வதாயிருக்கக் கூடாதா?’’

இவர் என்ன சொல்றாரு விளங்குதில்லே. ஆனால் இப்படிப் பேசினா நெஞ்சிலே எதுவோ பயங்காணுது.

கொஞ்சம் நெருங்கி வரார். மூக்கு எடுப்பா, எப்படிக் கத்தியாட்டம்!

"சாமியாரே ஒண்னு சொல்லுங்க; உங்கள் தாடிக்கும் மீசைக்கும் உள்ளே ஒளிஞ்சிட்டிருக்கிறது யார்? என்ன அப்படி முழிக்கறிங்க? எனக்கு முன்னாலேயே தெரியும், எதுக்கும் சந்தேகத்துக்குக் கேட்டேன்; அவ்வளவுதான்’ சும்மா மிரளாதீங்க.”

"எசமான் எனக்கொண்ணுமே தெரியாது.”

"நான் சொல்றதும் அதுவேதான். நீங்க ஏதுக்கும் பயப்படத் தேவையில்லே."

"எசமான் நாய்க்கு ஒண்ணும் தேவையில்லே, கையெடுத்துக் கும்பிடறேன். எசமான் எனக்கு இலையிலே கொடுத்துட்டா, மடியிலே சுருட்டிக்கிட்டு எங்கேனாச்சும் காவாய்க் கரையோரம் கண் காணாமே போயிடுவேன்"

"சேச்சே-"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/164&oldid=1288551" இலிருந்து மீள்விக்கப்பட்டது