பக்கம்:அவள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் 17


ஆனால் எங்கு சுற்றினாலும் என் வளைக்குத் திரும்புகையில், என் வாழ்வின் படுகையாய், என் பூமியின் வண்டல் மண்ணாய், தழை எருவாய், பரம்பரையாய்த் தோய்ந்து அவள்தான் திகழ்கிறாள்...

பெருந்திரு!

படம் வந்ததிலிருந்து, தினமும் விடிகாலை, பல் துலக்கியதும், உதிரி விபூதி தரித்துக்கொண்டு, பூஜை அலமாரியண்டை போய் நிற்கிறேன். அலமாரியடியில் ஸ்ரீகாந்த் படுத்திருக்கிறான். இடற வேண்டாமென்று என்னதான் ஜாக்கிரதையாயிருந்தாலும் -

  • அப்பா தட்டுத் தடுமாறிண்டு வந்து விளக்கைப் போட்டு இந்த நேரத்துக்கு என்ன கழுத்தையறுக்கறார்?"

பையன் எரிந்து விழுந்துகொண்டு போர்வையை இழுத்துத் தலையை மூடிக்கொள்கிறான்.

ஆனாலும் அங்கே நிற்கிறேன். முகத்தை நீட்டிப் படத்தை உன்னிப் பார்க்கிறேன்.

திருவாசியை அடைத்துக்கொண்டு ஆள் உயரத்துக்குச் சிலை. கர்ப்பக்ருஹ இருளில் முகத்தின் கருமையில் எந்த மூலவருக்குத்தான். முகலகூணங்கள் தனியாகத் தெரிகின்றன? மூக்குத்தி, தாடங்கம்; கை, பாத கவசங்கள், அணிவித்திருக்கும் தோம்பின் சிவப்பு; ஆனால் முகம் மட்டும் ஒரு கருப்புப் பூச்சுதான்.

இந்தப் படத்திலும் அப்படித்தானிருக்கிறது. அதனாலேயே நேரே பார்க்கிற மாதிரியிருக்கிறது.

படத்தில் அவள்; எதிரே நான். இப்படி நாங்கள் நிற்கையில் எங்கள் மேல் ஏதோ நூற்பு படர்வதுபோல் தோன்றுகிறது. எண்ணத்தின் கடையலில் உண்டானது தானானாலும், இழை அதன் அத்தனை ஸ்ன்னத்தில் புலனுக்கு நெருடுவதுபோல உணர்வு.


அ.- 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/61&oldid=1496240" இலிருந்து மீள்விக்கப்பட்டது