பக்கம்:அவள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜ்வாலாமுகி 37


லகூியங்கள், கற்பனைகள், தீர்த்துக்கொள்ள முடியாத தாபங்களை உருவேற்றி, என் நம்பிக்கையின் பலத்தில் அத்தனையும் ஒருமுகமாய எண்ணத்தின் தீவிரம் நீ.

ஆனால் நீ, நீயே உண்டானாயா அல்லது என் எண்ணத்தின் தோற்றுவிப்பா? புரியவில்லையே!

என்னிடம் கொஞ்சகாலமாக ஓர் இளைஞர் வந்து கொண்டிருக்கிறார். "எதுவுமே-எண்ணங்கள் உள்பட யதேச்சை (Spontaneous) அன்று. எண்ணங்களைத் தோற்றுவிக்கும் கருவி, மனம். அந்த எண்ணங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளும் கருவி, மூனள. மனம் வேறு மூளை வேறு" - இது அவர் கருத்து.

"அப்படியானால் மனம், மூளை இவைக்கு மூலம்?"

"ஓ, அது, அந்தப் படுகை, மிக்க ஆழமானது, ஆதாரமானது,"

லேசாகச் சிரிப்பு அவர் உதடுகளில் அரும்பு கட்டுகிறது. அவர் பற்கள் வரிசையாயிருக்கின்றன. தர்க்க ரீதியில் அவர் சரியாயிருக்கலாம். ஆனால் எனக்குச் சமாதானமில்லை.

"நீ கண்டாயா?" என்று எப்படிக் கேட்க முடியும்?

சரி, நீதான் அத்தப் படுகையா?

பதில் கிடைக்காவிட்டாலும் கேள்வியே உறுதுணை தான்.

தேடல், சீண்டல், நாடல், வேண்டல், ஏங்கல், முன்னேறல், பின்வாங்கல், இடறிவிடுதல், தடுக்கிவிழல், தள்ளிவிழல், இவைக்கெல்லாம் தத்துவம் கற்பித்தல், நியாயம் சாதித்தல், அதையே கொள்கையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/81&oldid=1496375" இலிருந்து மீள்விக்கப்பட்டது