பக்கம்:அவள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

லா. ச. ராமாமிருதம்

அங்க விமர்சனம்! என்ன தைரியம்! என்கிறாயா? No, no, my son, She is not my type of sex, I would fall for. How to convince you, it is so boring, because you are boring, அதனால்தான் இந்தக் கடிதமே எனக்குக் கொட்டி ஆற்றிக்கொள்ள ஒரு களம் வேண்டாமா?

ஆனால் ஒரு radiance, பாஸ்கர், உணர உணர விரிவாகிக்கொண்டே போகும் ஒரு ஒளிப்ரபை. அதன் நடுவில் அவள். அவளைப் பார்க்கும்போதும், கேட்கும் போதும், கவனிக்கும்போதும் ஏதேதோ மறந்துபோனதெல்லாம், இந்த ஐன்மத்தில் மட்டுமல்ல. ஜன்மேதி ஜன்மாவின் நினைவுகள், நிழல்கள் ஆடுவதுபோல், ஏதேதோ பழங்கணக்குகள் பிரிவதுபோல்— என்ன நினைவு, என்ன கணக்கு? Ask me another. ஆனால் இந்தப் பழைய பாடத் திருப்பலில், சிக்குப் பிரிதலில் ஒரு இதவு, ஒரு கலிக்கம். அதனால் மனசு லேசு, அதுவே ஒரு புதுமை, ஒரு adventure.

அன்று தன் தாத்தாவையும் பாட்டியையும் பற்றிச் சொன்னாளே, நினைவிருக்கிறதா? அவள் சொன்னதை விட, அவள் பேசினது இருக்கே, இன்னமும் அதன் wonderment எனக்கு ஒயவில்லை. ஆனால் ஒண்னு நான் ஒப்புக்கொள்ளணும். சிந்திக்க, ஆச்சரியப்பட எனக்கு நேரம் இருக்கிறது. நினைத்து நினைத்து என் தன்மையின் உண்மையின் கவிதையும் என் சிந்தனையுடன் கலந்த குழைவுச்கு ஒரு தரிசன ருசி வந்துவிடுகிறதோ?

அனு பேசுகிறாள்:

"தாத்தாவையும் பாட்டியையும் பார்த்த நினைப்பு எனக்கில்லை. நான் குழந்தையாம். ஆனால் என்னில், பாட்டியை அப்படியே உரிச்சு வெச்சிருப்பதாகப் பார்த்தவா சொல்றா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/110&oldid=1496886" இலிருந்து மீள்விக்கப்பட்டது