பக்கம்:அவள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 லா. ச. ராமாமிருதம்



கன்றுக்குப் பாலைக் கொடாது தன் பாலைத் தானே குடிக்க முயலும் பசுவுக்குக் கழுத்தில் கடயம் போட்டு விடுவார்கள், உனக்கு இப்பொழுது நேர்ந்திருப்பதும் அதுவே தவிர, வேறல்ல. நீ அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அதனால் அவள் பாலைக் குடித்து விடலாம் என்று நினைத்தாய் அல்லவா? இதுதான் ஜன்மத்தின் முதல் பாடம். எண்ணியது எண்ணியபடி நடக்குமென்று எண்ணாதே!'

***

ளர்ப்புத் தாய்க்கும் ஜனனிக்கும் இடையிலுள்ள பகை பயங்கரமாய் வளர்ந்தது. பகை அம்மாளுடையதேயாகையால், அதன் முழு வேகத்தையும், பாரத்தையும் அவளே தாங்கும்படியாயிற்று. இடாத வேலைகளை இட்டு, சொல்லாத சொற்களைச் சொல்லி, படாத பாடு எல்லாம் படுத்தினாள்.

'வயசுபாட்டுக்கு ஆறது. வேளா வேளைக்கு வந்து வயிறு புடைக்கத் திங்கறதோடு சரி. மத்தப்படி கண்ணிலே படறதில்லே. எல்லைக் காளியா ஊரெல்லாம் சுத்தித் திரிஞ்சுப்பிட்டு அவர் வருதிற வேளைக்கு, இந்தப் பூனையும் இத்தப் பாலைக் குடிக்குமான்னு வினக்கெதிரே கண்ணை மூடிண்டு உட்கார்ந்திருக்கையேடி! எந்த ஊரைப் பொசுக்கலாம்னு யோசனை பண்ணின்டிருக்கே?"

'இல்லேம்மா...'

'என்னை அம்மா'ங்காதேடி! உன்னை ஆசையா அடித் துணியோடு எந்தக் குளத்தங்கரைப் படிக்கட்டிலே இருந்து கொண்டுவந்தாரோ, அங்கே போய் உன் அம்மாவைத் தேடு, அம்மாவாம், அம்மா! என்ன சொந்தண்டியம்மா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/182&oldid=1496981" இலிருந்து மீள்விக்கப்பட்டது