பக்கம்:அவள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 175

'ஸ..ரி...ரி...ம...மாம்...மா...மா...மா"

தடவிக் கொடுத்தாற்போல் அக்ஷரங்கள் ஒன்றோடொன்று குழைந்தன. சுருதியில் ஒளிந்து விளையாடின.

ஸரி மாம மா மமா மக ரி ரீ..." அவள் கைகள் கூப்பிக் கோத்துக் குவிந்து அந்தரப்பட்சிபோல் தவித்தன. கன்னத்தில் கண்ணிர் வழிந்தோடியபடி இருந்தது. அவள் அவஸ்தையைக் கண்டு அவன் பாடுவதை நிறுத்தினான்.

'தாக்ஷாயணி, ஏன் அழுகிறாய்?" "நான் அழவில்லை. என் நெஞ்சை மீட்டுகிறீர்கள். என் நெஞ்சில் எவ்வளவு ஆழம் என்னையும் அறியாமல் பதிந்தீர்கள் என்று அன்றுவரை நான் அறியேன். நான் வளர்ந்த சூழ் கிலையில், எவ்வளவோ புருஷர்களோடு பேசிச் சிரித்துக் கொட்டமடித்திருக்கிறேன். அதற்கு என் வீட்டிலும் தடங்கல் இல்லை. காலேஜில் எத்தனை மாணவர்கள், வகுப்புக்கு எத்தனை வாத்தியார்கள்!"

'அதே மாதிரி பாட்டுக்கும் ஒரு வாத்தியார்.” 'அப்படித்தான் அப்பா நினைத்தார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் அப்படி இல்லை.”

'ஏன், எப்படி இருந்தேன்? உன்னிடம் தப்பாக நடந்துகொண்டேனா?'

'இல்லை, இல்லை, ஒருக்காலும் இல்லை. சத்தியமாக இல்லை. ஆவேசத்துடன் அவன் பாதங்களைக் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டாள். 'என் முகத்தைக்கூட நீங்கள் சரியாகப் பார்த்தீர்களோ, எனக்கு இன்னும் சந்தேகம். பாடும் நேரம்வரை கல்லாலடித்தாற்போல் உட்கார்ந்திருந்து, வேலையானதும் சொல்லிக்கொள்ளாமல்கூடப் போய்விடுவீர்களே! என்னோடு எங்கே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/219&oldid=1496386" இலிருந்து மீள்விக்கப்பட்டது