பக்கம்:அவள்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயம் 483

"இந்த விளையாட்டின் பரம்பரை வேதகாலத்தையே அல்லவா தொடறது! பரமேஸ்வரனும் பார்வதியுமே கைலாசத்தில் ஆடினதாக ஐதீகம் பேசறது. பாரதக் கதையின் அச்சே, இந்தச் சொக்கட்டான் ஆட்டத்தில்தானே சுழல்கிறது: பொறுக்கவா? கோர்க்கவா? சினிமாப் பிரியர்களின் Favourite moment அல்லவா? Enough-முதல்ஆட்டம் சாமிக்கு... கட்டை உள்ளங்கைகளில் பரபரவென்று தேய்த்து உருட்டினார். பன்னிரண்டு-இரண்டுக்கும் Blank Side. Faceless. சுவாமி ஆட்டம் Correct. இப்போ நீ?

'ஆடினேன். ஆடிவிட்டுக் கை கொட்டினேன்.

x`"எடுத்தவுடனே தாயமா? Beginner's Luck!"

எடுத்து ஆடினேன். மறுபடியும் தாயம்.

"Good Good! தாயம் என்கிறது லேசான சமாச்சாரமா? தாயமோ தலைவிதியோ...'

"இதுக்கென்ன அவ்வளவு பெரிய வார்த்தை!?"

Why not? ஒவ்வொரு தாயமும் காய்க்கு ஒரு பிறவி. Then the Excitement! அடுத்து விழப்போகும் தொகையின் மர்மம் கட்டைக்குள் அடக்கம். No wonder, it is the Game of Life itself. மறுபடியும் தாயமா? So your luck holds on?’

எனக்கு மூன்று காய்கள் இறங்கிய பின்னர்தான் அவருக்கு முதல் தாயமே விழுந்தது. அப்புறம் நேரம் பொறுத்துக் கட்டைகளுக்கு மனமே இல்லாதுபோல் இன்னொரு தாயம். ஆனால் அவர் காய் இறங்கி வெளி வந்ததும் என் காய் காத்துக்கொண்டிருந்தது. பன்னிரண்டு, ரெண்டு, இரண்டுக்கு வெட்டி, பன்னிரண்டுக்கு முதல் பழம் ஏறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/527&oldid=1497570" இலிருந்து மீள்விக்கப்பட்டது