பக்கம்:அவள்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல் 491

ஆனால் அம்மாவே சொல்லியிருக்கிறாள். கூட்டுக் குடித்தனம் என்றால் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில்தான் வாழ்க்கைப் பட்டாளாம். இடம் போதாத வீட்டில் நாலு ஜோடிகள் வாசம் பண்ணணுமானால் என்ன பண்றது? வீட்டுக்கு விருந்தாளி வந்தூட்டால் கேட்கவே வேண்டாம். திடீர்னு ஒரு ஜோடியின் ஒரு படுக்கை தானாகவே திண்ணையில் வந்து விழுந்து விடுமாம். சீட்டைப் போட்டுக் குலுக்கினாற் போல் யார் படுக்கை என்று போட்ட பிறகுதான் தெரியுமாம். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது; திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி வாயை மூடிண்டிருக்க வேண்டியதுதான். அம்மா சொல்றப்போ எனக்கு சிரிப்பாய் வரும், இந்தச் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னால் அப்பாகூடச் சொன்னார்: 'இதென்னடி, இது அவ்வளவு உசிதமோ? ஒரே சம்சார வீடாயிருக்கிறது. பையன் நாலுபேருக்கு நடுவில் நாலாமவனாயிருக்கிறான். இன்னும் கலியாணத்துக்கு ஒன்று இரண்டு பெண்கள் காத்திருக்கிறாப் போலிருக்கிறது."

'இருக்கட்டும், இருக்கட்டும், நிறையக் குடித்தனமாயிருந்து நிறையப் பெருகட்டும். நாளாவட்டத்தில் இது தான் நம் பெண்ணுக்கு நல்லதா விளையும், பாருங்கோ. இப்போ நமக்கு என்ன குறைஞ்சு போச்சு? எடுத்தவுடனே இக்கு பிடுqங்கல் இல்லாமல், கையை கோத்துண்டு போன வாளெல்லாம் கடைசியில், உலகம் தேரியாமல். எது நிலைச்சுது தெரியாமல், நாயும் பூனையுமா நாறிண்டிருக்கிறதை நான் பார்த்துண்டுதானே இருக்கேன்! பையன் நல்லவேளையா நாலாம் பிள்ளையாத்தானே இருக்கான்? என் மாதிரி, என் பெண், வீட்டுக்கு மூத்த நாட்டுப்பெண்ணாய் வாழ்க்கைப்பட வேண்டாமே?”

அம்மா அப்படிச் சொல்றப்போ நன்னாத்தானிருக்கு: நாவலில் கதாநாயகியாயிருக்க யார்தான் ஆசைப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/535&oldid=1497471" இலிருந்து மீள்விக்கப்பட்டது