பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536


"பிழிந்த பால்வழி துரையெனப் பொருவுவ பிடவம்' - என்றார். இவ்வாறு பிடவம் பூ வெண்ணிலவாய், பால் வழி நுரை யாய் அழகுதரும் பூ. இப்பூ செம்மண் பாதையில் உதிர்ந்து கிடப்பது செங்கம்பளத்தில் வெண்மை மாக்கோலம் போட்டது போன்று விளங்கிற்றாம். : இப் பூங்கொத்து வட்டமாகப் பூக்கள் நிறைந்திருப்பதன் தொடர்பால் ஒரு சொல் உருவாகியது. பூந்தட்டைக் குறிகக உள்ள சில சொற்களில் பிடகை என்பது ஒன்று. இச்சொல் பிடவங்கொத்தின் உவமைத் தொடர்பால் உருவானது. இப்பூவால் ஒர் ஊர் உளது. அது பிடவூர். பெயர் பெற்ற ஊர். சோழநாட்டில் உறையூர்க்குக் கிழக்கே உள்ளது. வரலாற்றுக் குறிப்புடையது. அவ்வூர்த் தலைவன் நெடுங்கை வேண்மான். அவனால் காக்கப்பட்ட ஊர். இச்செய்தியை நக்கீரர் தருகின்றார். “... ... தித்தன் உறந்தைக் குணா அது நெடுங்கை வேண் மான் அருங்கடிப் பிடவூர்”8 இடைக்காலத்தில் இஃதொரு வைப்புத்தலம் ஆயிற்று. மற்றொரு இலக்கியக் களமாகவும் இவ்வூர் குறிக்கப்படும். கழறிற்றறிவார் என்னும் சைவ அடியார் எழுதிய "திருவுலாப்புறம்’ என்னும் நூல் இவ்வூரில்தான் வெளியிடப்பட்டது. - இவ்வூர் நச்சினார்க்கினியராலும் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக பிடவம் பூ, ஒரு வரலாற்றுப் பெயராகவும், ஒர் இலக்கிய களமாகவும் நிறைகின்றது. - نشسس سنستحسنست 1 கம்ப : கார் : 47 : 4. 8 upພໍ່ 89ວ້ : 19, 20 2 அகம் ; 154 : 4, 5, -