பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 145 தான் இருக்க வேண்டும் என்று நான் யூகம் செய்து கொண்டேன். ஆனால், அவன் எப்போதும் திருட்டோடு நிற்பானேயொழிய இப்படிப்பட்ட காதல் விஷயங்களில் தலையிடக்கூடியவன் அல்ல என்ற சந்தேகம் உண்டாயிற்று. ஆகையால், நான் மேலும் சிந்தித்தேன். அன்றைய தினம் அவர்கள் செய்திருந்த ஏற்பாடுகளை எல்லாம் பார்த்தால், அவர்கள் தற்செயலாக அதைச் செய்யவில்லை என்பதும், முன்னாக முடிவு செய்தே அப்படிப்பட்ட ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்கள் என்பதும் புலப்பட்டன. இளவரசரும் தாங்களும் அன்றைய தினம் ராத்திரி அம்மன் பேட்டை அன்னத்தின் வீட்டுக்கு வந்திருந்துவிட்டு நடு இரவில் திரும்பிவரப் போகிறீர்கள் என்பதை எல்லாம் முன்னாக அறிந்தே அவர்கள் சகலமான ஏற்பாடுகளையும் தோதாகச் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு நிச்சயம் என் மனசில் உண்டாயிற்று. ஆகவே, அன்னத்தம்மாளுடைய வீட்டில் உள்ள யாரோ ஒரு மனிதர் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருந்து, அவர் அந்தச் சமாசாரத்தைச் சொன்னதனாலேயே, கட்டாரித் தேவன் அதற்குப் பொருத்தமாக சகலமான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறான் என்று நான் எண்ணிக் கொண்டேன். ஆகவே இந்த இரண்டு சூசனைகளையும் வைத்துக் கொண்டு வேலை செய்தால், உண்மை விளங்கிப் போகும் என்று உறுதி செய்து கொண்டவனாய், நான் வியாழக்கிழமை காலையில் புறப்பட்டு அம்மன் பேட்டைக்குப் போய்ச் சேர்ந்தேன்' என்றார். - ஜெமீந்தார் மிகுந்த வியப்புற்று. பலே பேஷ் அன்றைய தினம் என்னிடம் சொத்துக்களை அபகரித்தவன் கட்டாரித் தேவனா! அவன் பரம துஷ்டன் என்று ஜனங்கள் சொல்லக் கேள்வியுற்றிருந்தேன். கடைசியில் அவன் என்னிடத்திலும் வந்து தம் சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டான் போல் இருக்கிறது. அன்னத்தம்மாள் வீட்டில் இருக்கும் எவனோ