பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

21

“கல்லங்காடு தனில்விளையாக்
கடுக நிலத்திற் றான்முளையா
அல்லனிருந்த கருங்கூந்தல்
அணங்குக்கு அணங்குபோல்வாள்
செல்லன்தேவி மனைகள்தொறும்
தேடித் திரிந்துங் காணாத
நெல்லஞ்சோறே கம்பஞ்சோற்றினை
நீ சுமந்து திரிவாயே!”

உள்ளமில்லாத எத்தனையோ பேர்களுக்கு நடுவே அன்பே உள்ளமாக இருந்த செல்லனையும், அவன் மனைவியையும் அவர்களிட்ட கம்பஞ்சோற்று விருந்தையும் பாடியதில் அவருக்கு ஒரு திருப்தி.

7. பாணனும் பாடினியும்

பதார்த்த உணர்விற்கு மட்டும் போதும் என்ற அளவில் வெறும் சொற்கோவையாக அமைந்துவிடும் கவிதைகள் கவர்ச்சி யற்றவை ஆகிவிடுகின்றன. பதத்தையும் பதத்தின் பொருளையும் தழுவி நடக்கின்ற அணி அலங்கார வேலைப் பாடுகளும் வேண்டும். பல பொருள் தருவதற்குரிய சில சொற்களைக் கொண்டு இருவர் வினா விடையாக உரையாடிக் கொள்வதாகவும், ஒருவர் எந்தப் பொருளோடு கூறுகிறாரோ, அது அல்லாத பிறிதோர் பொருளில் கேட்பவர் அதை உணர்ந்து மறுமொழி கூறியதாகவும் சொற்பொருளணி செறிந்த சித்திரமான வினாவுத்தரச் செய்யுள் தனிப்பாடல் திரட்டில் பலவுண்டு பாடல்களைப் பாடி வேண்டிய பரிசில் பெற்று வாழும் ஒரு பாணனும் அவன் மனைவியாகிய பாடினி ஒருத்தியும் தம்முள் உரையாடுவதாக அமைந்துள்ள தனிப்பாடல் ஒன்றை இங்கே காண்போம். சுவைமிக்க பாடல் அது.