பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


'இல்வளர் முல்லை மல்லிகை மயிலை' (5 : 191) “மாதவி மல்லிகை மெளவல் முல்லை’ ( 13 : 120) 'இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த” (4.) என்றெல்லாம் முல்லையும் மல்லிகையும் வெவ்வேறு மலர் களாகக் காட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து பிற்கால இலக்கியங்கள் பலவும் இவ்வாறு குறிக்கின்றன, - - --> நிகண்டுகளில் சேந்தன் திவாகரம் முல்லையையும் மல்லிகை யையும் குழப்பிவிடுகின்றது. பிங்கலமும் சூடாமணியும் முல்லை வேறாகவும் மல்லிகை வேறாகவும் குறிக்கின்றன. - - இவற்றையெல்லாம் ஒன்று கூட்டி ஆய்ந்தால் கல்லிகை என்பது வந்திறங்கிய கலப்பினத்ததாக-இங்கு இடம்பெற்றதாகக் கொள்ள நேர்கின்றது, வடமொழி நூல்களில் முல்லை இடம் பெறவில்லை. மல்லிகையே நிறைவாகப் பேசப்படும். - . . . . . வான்மீகியார் சீதையின் உடல் நிறம் மல்லிகை நிறம் போன்றது' என்றார். - - இராசதரங்கினியின் ஆசிரியர் கல்கனப்பட்டரும் மல்லிகை யைப் போற்றியுள்ளார். கவிவேந்தன் காளிதாசன் தனது மேகதூதத்திலும் சாகுந்தலத்திலும் மல்லிகை மலரை அள்ளித் துரவியுள்ளான். சகுந்தலையின் உடல் நிறம் மல்லிகை என்றான். சகுந்தலையின் உயிர்த்தோழி பிரியம்வதை சகுந்தலையை, 'இவள் புதிதாக மலர்ந்த மல்லிகை மலர்போல் உள்ளவள் என்று வண்ணிக் கின்றாள். சகுந்தலை தேவமகளின் மகள். அவளால் கைவிடப் பட்டுச் சகுந்தலை கண்ணுவ முனிவரிடம் வளர்கின்றாள். அவளது அழகிற்கு அவள் வளர்க்கப்படும் காட்டுப் பகுதி துசியந்தனுக்கு உகந்ததாகப்படவில்லை. அதனை, 'புது மல்லிகைப் பூ உதிர்ந்து எருக்கஞ்செடிமேல். வீழ்ந்ததுபோல் உள்ளாள்' -என்கின்றான். - இவற்றையும் கொண்டு நோக்கினால் மல்லிகை என்னும் சொல் வந்திறங்கியதாக-தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றதாகக் கொள்ள வேண்டும். -