பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15

சென்றான். விதைக்கூடை நனைந்த விதைகளுடன் ஒருமூலையில் விட்டெறியப்பட்டுக்கிடந்தது. கொல்லையில் மல்லிகைப் புதரடியில் அவன் கண்ட காட்சி! தூக்கிவாரிப் போட்டது! ஒரு சிறு நல்லபாம்பு அவனுடைய ஆறு வயது பையனின் கையைச் சுற்றிப் படமெடுத்துக் கொண்டிருந்தது. அதைக் கையிலிருந்து உதற வழி தெரியாமல் ‘ஐயோ அப்பா’ என்று பையன் கூக்குரலிட ஆரம்பித்தான். மாட்டுக்கொட்டத்தில் நுழைய இருந்த அவனை அந்தக் குரல்தான் கொல்லைப்புறம் திரும்பவைத்தது. பக்கத்திலிருந்த தார்க்குச்சியை எடுத்துக்கொண்டு ஓடினான் அவன். ஆனால் அதற்குள் அந்தப் பாம்பு பையனின் முன்கையில் மணிக்கட்டின்மேல் தன் கொடு விஷத்தைப் பாய்ச்சிவிட்டது. சரசவென்று இறங்கிப் புதருக்குள் ஓடி ஒளிந்த பாம்பை அவனால் அடிக்கவும் முடியவில்லை. வாசலில் மூன்று இருசாலாகத் தீர்வை போடவில்லை என்று ஊர்கணக்கன் நிலத் தீர்வை நோட்டீசுடன் ஜப்தி செய்ய வந்திருந்தான். தெருவோடு போய்க்கொண்டிருந்த குருக்கள், “என்றோ அவன் திதி கொடுத்ததற்குத் தட்சிணை வைக்கவில்லை” என்று வாய் நிறைய வைது கொண்டே நடந்தார். என்ன செய்வான் ஒருவன்? அழவில்லை! சிரித்தான். நினைவுடன் கூடிய சிரிப்பல்ல அது. அவன் பைத்தியமாகிவிட்டான். துயரின் ஒருமை வரவைப் பொறுத்துக்கொள்ளமுடியும்! துயரின் பன்மை அடுக்கடுக்காக மேல் மேல்வந்தால் ஒருவன் பைத்தியமாகத்தானே ஆகவேண்டும்?

"ஆ ஈன மழைபொழிய இல்லம் வீழ
அகத்து அடியாள் மெய் நோவ அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சா வோலை கொண்டொருவன் எதிரே போகத் .
தள்ள ஒண்ணா விருந்து வரச் சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்களோ தட்சிணைகள் கொடு என்றாரே."