பக்கம்:மதன கல்யாணி-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85 வினவினாள். மதனகோபாலன் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரினது அபிமான புத்திரனாக மதிக்கப்பட்டு அந்த பங்களாவின் எஜமான் போல இருந்து வந்தானாகையால், அவர் சாதாரணமான வீணை வித்துவானாக இருந்தான் என்பது அந்த வேலைக்காரர்களுக்குத் தெரியாது. ஆகவே, அந்த வேலைக்காரன் வீணை வித்துவான் எவனும் அந்த பங்களாவில் இல்லை என்றும், அது கிருஷ்ணா புரத்து ஜெமீந்தாரது பங்களாவென்றும் மறுமொழி கூறினான். அதைக் கேட்டு, மேலே எவ்வித மறுமொழியும் சொல்லமாட்டாமல் சிறிது தயங்கிய பின் பொன்னம்மாள் திரும்பி நடந்து, ராஜ பாட்டையில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியண்டை வந்து நின்று, தான் அறிந்து வந்த விவரத்தைச் சொல்ல, அதைக் கேட்ட கல்யாணியம்மாள் பெரிதும் திகைப்படைந்தவளாய், "கிருஷ்ணா புரத்து ஜெமீந்தாருக்குத் தேனாம்பேட்டையில் அல்லவா ஒரு பங்களா இருக்கிறது? இது யாரோ ஒரு மகாராஜனின் அரண்மனை போல இருக்கிறதே! ஒருகால், வட இந்தியாவில் கிருஷ்ணாபுரம் என்று ஏதாவது சமஸ்தானம் இருக்குமோ! அப்படி இருந்தால, கோமளேசுவரன் பேட்டையில் சங்கதி சொன்னவன் உன்னிடத்தில் பொய்யையா சொன்னான? மனோகர விலாஸ் என்று இந்தத் தகட்டில் எழுதப்படடிருக்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறதே! மதனகோபாலன் வீணைவித்துவான் என்பது ஒருவேளை இந்த வேலைககாரனுக்குத் தெரியாதிருக்குமோ?" என்று பலவாறு ஐயமுற்றுத் தயங்கி மேலே என்ன செய்வதென்பதைப் பற்றி சிறிது நேரம் சிந்தித்து, "பொன்னம்மா! நாம் ஒரு காரியம் செய்வோம். மைலாப்பூரில் வக்கீல் அருணகிரிப் பிள்ளையினிடத்தில் கேட்டு விசாரிப்போம். அவர் மதனகோபாலனுடைய வக்கீல் ஆகையால் அவனுடைய இருப்பிடம் அவருக்குத் தெரிந்திருக்கும்; வண்டியைத் திருப்பி ஊருக்குள் விடச்சொல்" என்றாள். வண்டி உடனே மைலாப்பூர்ப் பக்கம் திருப்பப்பட்டு நாலைந்து கஜதுரம் சென்றது. அதற்குள் அந்த பங்களாவில் இருந்து யாரோ கையைத் தட்டி அவர்களைக் கூப்பிட்ட வண்ணம் ராஜபாட்டைக்கு ஓடிவந்ததாகத் தெரிந்தது. உடனே வணடி நிறுத்தப்பட்டது. அடுத்த நிமிஷம் மதனகோபாலனே ஒடி வந்து வண்டியண்டையில் நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/89&oldid=853491" இலிருந்து மீள்விக்கப்பட்டது