பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அவர் இசையரங்கை 1918-ஆம் ஆண்டில் தொடங்கினார் .அந்த நேரத்தில் அவர் பிட்ச்பீல்டுக்கு அருகிலுள்ள தமது தொன்மலைத் தோட்டத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலம் அவரது வாழ்நாளிலே இருண்ட காலமாகும். பதினைந்து நாளுக்குள் கட்டிய கணவனே இழந்தார் ; அதன் பின்னர் பெற்று வளர்த்த தந்தை தாயையும் எமனுக்கு இரை கொடுத்தார். மணந்த கணவனேயும், மறைந்த பெற்றோரையும் இழந்த துக்கக்கடலிலே அந்த அம்மையார் பெருந்துன்பம் பெற்றர். பிறகு அந்த துக்கத்துக்குத் தாமும் இரையாகாமல் நண்பர் அறிவுரையின் பேரில் ஓர் இசையரங்கை ஏற்படுத்தினார். நாளடைவில் அக்கம் பக்கத்து மக்களையும் தமது இசைப்பணியில் பங்குகொள்ளச் செய்தார்.

இந்த நேரத்தில் ஓர் இசைவிழா அவர் வாழ்ந்த தென்மலையில் நடத்தப்பெற்றது. அதில் பொதுமக்கள் தத்தம் இசைத்திறமையைக் காட்டினர். அதிலே அந்த அம்மையாரும் பங்குகொண்டார். அவர் அவ்வாறு ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் பங்குகொண்டார். அவரது வாழ்நாளில் அவர் கலந்து கொண்ட கடைசி விழா 35வது ஆண்டு விழாவாகும். அது நடைபெற்ற ஆண்டு 1953 ஆகும். அடுத்து வந்த ஆண்டு விழாவில் அந்த அம்மையாரின் நினைவுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தொடக்கத்தில் அம்மையாரின் இசைக்குழுவும், ஐரோப்பாவிலிருந்து வந்த இசைக்குழுக்களும் விழாக்களில் பங்குகொண்டன. விழாக்களில் பழங்கால இசையும், தற்கால இசையும் இசைக்கப்பட்டன. இங்குப் பாடப் பெற்றவற்றில் பெரும்பாலானவை அம்மையாராலேயே இயற்றப்பெற்றவை. மேலும் இசைப்போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. அதிலே பல நாடுகள் கலந்து