பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பொழிவாற்றி வந்தார். 1928-ஆம் ஆண்டில் அவரும் பிற பேராசிரியர்களும் சேர்ந்து அமெரிக்க நாட்டுக் காங்கிரசு நூலகத்திலே நாட்டுப்பாடல்துறை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்தனர்.

1933-ஆம் ஆண்டில் லோமாக்சும் அவரது மகனும் தென் பகுதி மாநிலங்களிலே 16000 மைல்கள் சுற்றி அங்கங்கே வாழும் மக்களையும், பள்ளி மாணவர்களையும், சிறைக் கைதிகளையும் கண்டு அவர்களிடையே வழங்கிவந்த நாட்டுப் பாடல்களைப் பிடித்து வந்தனர். அவையே இன்று நாட்டுப்பாடல் மன்றத்தின் நடுநாயகமாக விளங்குகின்றன.

லோமாக்ச் 1948-இல் கலமானார். அவர் காலமாவதற்கு முன்பே வாசெல்லிண்டசை என்னும் கவிஞரும் கார்ல் சந்துபர்க் என்னும் கவிஞரும் நாட்டுப் பாடல்களை வேட்டையாடத் தொடங்கிவிட்டனர். நாட்டுப் பாடல்கள் எந்தெந்த வகைகளிலே இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன? எத்தனே பாடல்கள் பிற நாட்டு நாகரிகங்களை எதிரொலிப்பவை என்பவற்றையெலாம் அக் கவிஞர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் ஆப்பிரிக்கா, ஆங்கிலம், பிரெஞ்சு, சிலாவி, பானிசு ஆகிய மொழிகளிலுள்ள நாட்டுப் பாடல்களை ஆராய்ந்துள்ளனர். அமெரிக்கநாட்டுப் பாடல்கள் மூலம் அந்த நாட்டு வரலாற்றையே கட்டுவதற்கு அவர்கள் முனைந்தனர். அதுமட்டு மன்று. ஒரே வகையான நாட்டுப் பாடல்கள் பரம்பரை தோறும் அடையும் சொல், ஒலி மாற்றங்களேயும் அவர்கள் ஆராயத் தலைப்பட்டனர்.

இந்த நாட்டுப் பாடல் மன்றம் பிற மாநிலங்களையெலாம் பல்லாண்டு காலமாகத் தத்தம் நாட்டுப் பாடலையெலாம் காத்து வருமாறு ஊக்குவித்து வருகின்றது. இதனைக் கண்ட பிற மாநிலங்களும் நாட்டுப் பாடலில்