பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பளிங்குக் கட்டடமாக அமையவேண்டுமென எண்ணினார். போதிய பணவசதி இல்லையாயினும், மக்கள் முன்வந்து விடாமுயற்சியுடன் மனமுவந்து உதவிகள் பல செய்து கண்கவர் கட்டடம் ஒன்றை எழுப்பினர். அவ்வாறு எழுவதற்குப் பெரிதும் முயன்றவர்களில் டாக்டர் பிலிங்சு என்பவர் குறிப்பிடத் தகுந்தவர். மக்கள் அனைவரும் எல்லா வசதிகளுடன் பயன்படுத்தத் தகுந்த முறையில் இந் நூலகம் அமைய வேண்டும் என்பதே அவரது பேரவா. பலதரப்பட்ட மக்கள் நியூயார்க் பொது நூலகத்திற்கு வர நேரிடும் என்பதை டாக்டர் பிலிங்க நன்கு அறிந்திருந்தார். ஆராய்ச்சியாளருக்குத் தேவையான அமைதியான சூழ்நிலையினையும் திறமை மிக்க சேவையினையும் இந்த நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், பொது மக்கள் கேட்கும் விவரங்களைத் துரிதமாகத் தெரியப்படுத்த வழிவகைகள் செய்யவேண்டும் என்றும், வெளிநாட்டினின்று வருவோர்க்கும் பயன்படும் வகையில் வசதிகள் இருத்தல் வேண்டும் என்றும் அவர் விரும்பினார். மேலும் அவர் மக்கள் நூல்களை எளிதாகவும் விரைவாகவும் பெற வேண்டும் என்ற கொள்கையை விடாப்பிடியாக மேற்கொண்டார். அவரது விருப்பப்படி மிகப் பெரிய படிப்பகமும் (Reading room),அதை அடுத்து நூல் அட்டவணை அறையும் (Catalogue room) அமைக்கப்பட்டன. அப் படிப்பகத்தில் ஒரே சமயத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இருந்து படிப்பதற்குரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் டாக்டர் பிலிங்சு அவர்கள் நூல்களைத் தொகை வகை விரி செய்து அமைத்தார். மாத வார வெளியீடுகளும் அங்ஙனமே பிரிக்கப்பட்டு வழங்குவதற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பெற்றன. புதிதாக வரும் நூல்கள், தனிப் பிரசுரங்கள் (Pamphlets) முக்கியமான கட்டுரைகள் முதலியவற்றிற்கு நூல் அட்ட-