பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

斋5 சிவபெருமானுடைய திருமேனி, அம்மேனியிற் பூசப்பெற்ற வெண்ணிறு, சிவந்த சடைத் தொகுதி, திருநீலகண்டம் என்பவற்றிற்கு முறையே ஒருநாள் என்ற காலப் பகுதியின் கூறுகளாகவுள்ள காலே, நண் பகல், மாலே, நள்ளிரவு என்னும் சிறு பொழுதுகளே உவமை கூறியதன் நோக்கம், கால காலணுகிய இறை வனேக் காலத்தின் தோற்றமுடையவனுகவும் எளிதில் வழிபட்டுய்தல் கூடும் என அறிவுறுத்தற் பொருட்டே யாம். நெருநலேயாய் இன்ருகி நாளேயாகி நிமிர் புன் சடையடிகள் நின்றவாறே என வரும் நின்ற திருத் தாண்டகம், காலங் கடந்த முதல்வனேக் காலத்தின் இயல்பில் நின்றருள் செய்பவகைப் போற்றுதல் காண்க. மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாருே - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடு நும்மார்பிற் பாம்பு. (66) இபள்: தி ரு மி ட ற் றி ல் ந ஞ் சி னே யடக்கிய இறைவரே, நுமது மார்பிடத்தே படம் விரித்தாடும் பாம்பானது, நுமது கண்டத்தை நக்கினமையால் தானும் நஞ்சுடைய தாயிற்ருே? நுமது கண்டத்தி னகத்தே பமைந்த குழைத்தமையின் தன்மை வாய்ந்த இருள் போலும் வண்ணத்தினேப் பெற்றுத் தானும் கரிய நிறமுடையதாய்த் தோன்றுகின்றது ஆதலின் எ-று. ஆல், ஒ என்பன அசை. ைபத்து-படம் விரித்து; “பை” என்ற பெயரடியாகப் பிறந்த வினேச் சொல். பை-படம். இறைவனது திருமார்பில் விளங்கும் பாம்பு அப்பெருமானது திருமிடற்றின் கருமை நிறம்