பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கருமையாகிய நிறப்பண்பு ஒன்றே பற்றி இருளும், கருநிறத்துடன் உலகிற்கு உணவு முதலிய நலங்களே விளேத்தல்பற்றி மாமேகமும், காண்போரது மயக்கத் தைப் போக்கி அருளாகிய நல்லொளியினே வழங்குதல் பற்றி மருள் இல்லாத நீலமணியும் இறைவனது நீல கண்டத்திற்கு உவமையாகக் கூறப்பட்டன. உயிர்களது மயக்கத்தைப் போக்கவல்ல நீலமணி யொன்று உளதாயின் அது இறைவனது திருமிடற் றுக்கு உவமை கூறத் தக்கதென் பார், மருள் இல் மணி நீலம்' என்ருர். இல்-இல்லையாகச் செய்கிற. ஒளிவிலி வன்மதனே யொன் பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய்-ஒளிநஞ்சம் உண்டவா யஃதிருப்ப வுன்னுடைய கண் டமிருள் கொண்டவா றென்னிதனேக் கூறு. (89) இ-ள் : ஒளி பொருந்திய வில்லே யேந்தியவனுகிய மன்மதனே அழலால் வெந்து சாம்பராகும்படி நோக்கி, (காமம், வெகுளி, மயக்கமாகிய மன மாசுகள் நீங்கித்) தெளிவு பெற்ற அடியார்களது திருந்திய சிந்தையிலே எழுந்தருளியுள்ள பெருமானே, வானேர்கள் அஞ்சி ஒடியொளித்தற்குக் க | ர ண மா கி ய ஆலகால நஞ்சத்தை உட்கொண்ட நினது திருவாய் நிறமாரு திருக்க, நின் திருமிடறு மட்டும் இருள் நிறம் பெற்று உருமாறியது என்னேயோ? இம்மாறுபாட்டுக்குரிய காரண த்தினை விளங்கக் கூறுவாயாக-எ-று. நின் திருமிடற்றிலுள்ள கருமை நிறம் நீயுட் கொண்ட நஞ்சின் கொடுமையில்ை ஏற்பட்டிருக்கு மானுல் அந்நஞ்சினே முதன் முதல் கொண்ட நின் வாயும் நிறத்தால் மாறுபட்டிருக்கவேண்டும். நின்