பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அத்தருமத்தின் பெருமையும் உச்ச நிலையை அடைந்தது.

ஆனால், அசோகர் தம்முடைய பெரும்பாலான கல்வெட்டுக்களின் மூலம் எங்தத் தருமத்தைப் பரப்பியுள்ளார்? அவற்றைப் படித்துப் பார்த்தால் , அவை எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகக் கருதப்பெறும் அடிப்படையான தருமத்தையே அவர் உபதேசம் செய்திருப்பது தெரியவரும். மானிட வாழ்க்கைக்கு வேண்டிய ஒழுக்க விதிகளையே அவர் மிகுதியும் வற்புறுத்தியுள்ளார். அவர் பெளத்தர் என்பதிலும், பெளத்த சமயத்திற்காக அவர் தீவிரமாக உழைத்தார் என்பதிலும் ஐயமேயில்லை. ஆயினும் அவர் மக்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்த அதிகாரிகளுக்கும் சர்வ சமய சமரசமான மார்க்கத்தையே வற்புறுத்தி வந்தார் என்பது தெளிவு. தாய் தந்தையரைப் பேணுதல், சத்தியம், அஹிம்சை, அன்பு முதலியவை யாருக்குத்தான் தேவையில்லை ? அவற்றையே அவர் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டுள்ளார்•

மயச் செருக்கோ, பிற சமயப் பழிப்போ அவரிடம் துளியும் இருந்ததில்லை என்று அவர்தம் எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பாறையும், ஒவ்வொரு தூணும் உறுதி கூறுகின்றன. பெளத்த துறவிகளான சிரமணர்களை அவர் தெய்வமாக எண்ணி வழிபட்டார். ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய பெரியோரையும் அவர் வனங்ககி, அவர்களுக்குத் தான தருமங்கள் செய்திருக்கிறார் என்று தெரிகின்றது. அவருக்குப்